27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
how to control the hair l
தலைமுடி சிகிச்சை

இதோ எளிய நிவாரணம்! முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலைமுடி வளர்ச்சியை தூண்டும் அற்புதமான பொடி!!!!

கரிசலாங்கண்ணி பொடி பற்றி நிச்சயமாக கேள்விபட்டு இருப்பீர்கள். தலைமுடிக்கு ஏகப்பட்ட நன்மைகளை தரக்கூடியது இந்த கரிசலாங்கண்ணி. தலைமுடி வளர்ச்சியை தூண்டி நரை முடி ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. பல அற்புதமான மருத்துவ குணங்கள் வாய்ந்த ஒரு செடி கரிசலாங்கண்ணி. இது இந்தியாவில் தலைமுடி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் பிரபலமான ஒரு செடி.

இந்தியாவில் இரண்டு வகையான கரிசலாங்கண்ணி செடிகள் கிடைக்கிறது. ஒன்று மஞ்சள் நிற பூக்களை தரக்கூடியது மற்றொன்று வெள்ளை நிற பூக்களோடு இருக்கும். தலைமுடி வளர்ச்சிக்கு இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கரிசலாங்கண்ணியால் நம் தலைமுடிக்கு ஏற்படும் நன்மைகளை இப்போது காணலாம்.

◆இளநரையை தடுப்பதில் கரிசலாங்கண்ணி பெரிய பங்கு வகிக்கிறது. நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்றும் தன்மை இதற்கு உண்டு. இதனை ஹேர் பேக்காகவோ அல்லது ஹேர் மாஸ்காகவோ பயன்படுத்தி வரலாம்.

◆உங்களுக்கு பொடுகு தொல்லை இருக்கும் பட்சத்தில் இந்த கரிசலாங்கண்ணி பொடியை பயன்படுத்தி வந்தால் பொடுகு விரைவில் சரியாகும். பொடுகு தொல்லை நீங்க கரிசலாங்கண்ணி பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை சேர்த்து பயன்படுத்தி வாருங்கள்.

◆ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் தன்மை கொண்ட கரிசலாங்கண்ணி பொடி தலைமுடி வேர்க்கால்களில் ஏற்படும் தொற்றுகளை விரைவில் சரியாக்க கூடியது. வேர்க்கால்களில் உண்டாகும் அரிப்பு, சொரியாசிஸ் போன்றவைகளுக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.

◆கரிசலாங்கண்ணி பொடியை ஹேர் மாஸ்காக பயன்படுத்தி வந்தால் தலைமுடி வேர்க்கால்களை வலுவடைய செய்து முடி உதிர்வை உடனடியாக கட்டுப்படுத்தும். உங்களுக்கு முடி உதிரும் பிரச்சனை இருந்தால் கரிசலாங்கண்ணி பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.

◆முடி வெடிப்பு மற்றும் வறண்ட முடிக்கு கரிசலாங்கண்ணி பொடி ஒரு சிறந்த கன்டிஷனராக அமைகிறது. தொடர்ந்து இந்த பொடியை முடிக்கு பயன்படுத்தி வரும்போது உங்கள் முடி மிகவும் மென்மையாக மாறி முடி வெடிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது.

◆சொட்டை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளரச் செய்ய கரிசலாங்கண்ணி பொடியை பயன்படுத்துங்கள். ஆண்கள் மட்டும் அன்றி ஒரு சில பெண்களுக்கு முடியை ஏற்றி சீவுவதால் முன்புறத்தில் சொட்டை விழுந்திருக்கும். இதனை தடுக்க கரிசலாங்கண்ணி இலை அல்லது பொடியை பயன்படுத்தி வாருங்கள்.

◆முன்பு கூறியது போல தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டுகிறது. நல்ல பலன் கிடைக்க கரிசலாங்கண்ணி ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும்.

Related posts

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…25 வயதில் வரக்கூடிய வெள்ளை முடிக்கான காரண‌ங்கள்

nathan

கூந்தல் வளர்ச்சியை ஷாம்பு அதிகப்படுத்துமா?

nathan

பொடுகுக்கான வீட்டு சிகிச்சை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா?

nathan

இள வயதில் முடி நரைப்பதற்கான காரணங்கள்

nathan

இதனை ஒரு வாரம் பயன்படுத்தினாலே போதும்!! இளநரையை முழுமையாக போக்க வேண்டுமா:?

nathan

முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

nathan

உங்க தலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

nathan