25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 15681
தலைமுடி சிகிச்சை

பெண்களே…. உங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க

வெள்ளரிக்காய் விதை எண்ணெய், இதில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது வைட்டமின் பி, லினோலிக் அமிலம், மெக்னீசியம், ஒலீயிக் அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், பால்மிடிக் அமிலம், பொட்டாசியம், சோடியம், ஸ்டீரிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் அடங்கியுள்ளன.

இந்த எண்ணெய் பார்ப்பதற்குச் சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் வாசனை நல்ல வெள்ளரிக்காயின் நறுமணத்துடன் இருக்கும். இந்த வெள்ளரி எண்ணெய் உங்கள் சருமம் மற்றும் முடி ஆகியவற்றில் உள்ள சில பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த எண்ணெய் குறைந்தது 2 வருடம் வரை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

சரும புத்துணர்ச்சி

சருமத்தில் பயன்படுத்தும் எந்த ஒரு எண்ணெய்யும் உங்கள் சருமத்திற்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தாது. ஆனால் வெள்ளரி விதை எண்ணெய் உங்கள் சருமத்தில் புத்துணர்ச்சியூட்டுகிறது. இந்த எண்ணெய் லேசான தன்மை கொண்டிருப்பதால் விரைவில் சருமத்தினால் உறிஞ்சப்பட்டு சருமத்தை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடையதாகவும் மாற்றுகிறது.

எதிர்ப்புப் பண்பு

வெள்ளரி விதை எண்ணெய் சக்திவாய்ந்த எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகங்களில் தேய்க்கும் போது சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தைக் கொடுக்கும் கோடுகள் போன்றவற்றைக் குறைக்க வழி செய்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ பண்புகள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் ரேடியண்ட்டுக்களை கட்டுப்படுத்தி வயதான தோற்றத்தை விரைவில் ஏற்படாமல் தடுக்கிறது.

முகப்பருக்கள்

உங்களுக்கு முகப்பருவால் அதிகத் தொல்லை இருந்தால் உங்கள் சருமத்திற்குச் சிறந்த தீர்வாக வெள்ளரி விதை எண்ணெய்கள் உதவும். உங்களுக்கு முகப்பரு ஏற்பட்ட இடத்தில் சற்று சிவப்பு நிறம் மற்றும் சருமப் பிளவுகள் போன்றவை ஏற்பட்டு இருக்கும். இவற்றை எதிர்த்துப் போராடி சரி செய்வதற்கான ஆக்ஸிஜனேற்றிகளை வெள்ளரி விதை எண்ணெய்கள் கொண்டுள்ளன.

சன்கிரீம்

வெள்ளரி விதை எண்ணெய்கள் சன் ஸ்கிரீன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வெயிலினால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தைச் சரிசெய்ய உதவும். வெள்ளரி விதை எண்ணெயைச் சருமத்தில் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தை குளிர்ச்சியடைய செய்து, வெயிலிலிருந்து பாதுகாக்கிறது.

நகம்

அழகாக நகம் வளர்த்து நெயில் பாலிஷ் போட வேண்டும் என்றால் எல்லோருக்கும் விருப்பம் தான். ஆனால் நகங்கள் உடைந்து அல்லது உறுதியாக இல்லாமல் இருந்தால் சற்று எரிச்சல் தான் வரும். எனவே உங்கள் நகம் உடையாமல் உறுதியாக இருக்க நீங்கள் வெள்ளரி விதை எண்ணெயை நகங்களில் தேயுங்கள். விரைவில் உறுதியாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும். பின்பு விதவிதமான நெயில் பாலிஷ் போட்டு அசத்துங்கள்.

மாய்ஸ்சரைசர்

நாம் உபயோகிக்கும் மாய்ஸ்சரைசர்களில் சில ஒட்டிக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கும். அது சிலருக்குச் சற்று எரிச்சலாக இருக்கும். எனவே உங்கள் சருமத்தில் ஓட்டாத மற்றும் விரைவில் உறிஞ்சும் மாய்ஸ்சரைசர் வேண்டுமென்றால் நீங்கள் வெள்ளரி விதை எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தில் ஒட்டாது மேலும் விரைவில் உறிஞ்சி விடும் தன்மை கொண்டது.

சருமழற்சி

வெள்ளரி விதை எண்ணெய் சரும அழற்சி, தடிப்பு தோலழற்சி மற்றும் சோரியாசிஸ் போன்றவற்றைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது. இந்த எண்ணெய்கள் அழற்சி எதிர்ப்பு, நல்ல ஆண்டிசெப்டிக் மற்றும் சிறந்த உமிழ்நீராகச் செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது. உங்கள் சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு இந்த எண்ணெய்யைத் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல முன்னேற்றத்தை விரைவில் காணலாம். மேலும் உங்களுக்கு மாய்ஸ்சரைசர் வேண்டுமென்றால் 1 கப் ஷியா வெண்ணெய் மற்றும் 1/4 கப் வெள்ளரி விதை எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்துப் பயன்படுத்துங்கள்.

கண்

நாம் தினமும் வெள்ளரிக்காய் எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்து கண்களில் வைக்க முடியாது. இதற்குச் சிறந்த தீர்வாக வெள்ளரி விதை எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்கள் கண்களுக்கு ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக விளங்கும். ஒன்று அல்லது இரண்டு சொட்டு எண்ணெய்களை எடுத்து கண்களில் தினமும் தேய்த்து வாருங்கள். இது கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கங்களையும் சரி செய்ய உதவும்.

முடி வளர்ச்சி

முடி வளர்ச்சியை அதிகரிக்க வெள்ளரி விதை எண்ணெய்கள் உதவும். இதில் தேவையான அளவு சிலிக்கா உள்ளது. இந்த சிலிக்காவானது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது அத்துடன் ஏற்கனவே இருக்கும் முடிகளை உறுதியாக்கி முடி உதிர்வதைத் தடுக்கிறது.11 1568

சுருண்ட முடி

வெள்ளரி விதை எண்ணெய் இயற்கையாகவே சுருண்ட முடிக்கு மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கிறது. சுருண்ட முடியில் வெள்ளரி விதை எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் விரைவில் உடைதல், ரசாயனங்கள், குளோரின் நீர் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உங்கள் முடியைப் பாதுகாக்கிறது. எனவே வெள்ளரி விதை எண்ணெயைப் பயன்படுத்தி அவற்றில் இருக்கும் சரும மற்றும் முடியின் நன்மைகளைப் பெறுங்கள்.

Related posts

ஒரே வாரத்தில் பொடுகைப் போக்கும் அற்புதப் பொருள் பற்றி தெரியுமா?

nathan

முடிகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமா? அப்ப வாரம் ஒருமுறை இத போடுங்க…

nathan

நீண்ட கருமையான கூந்தல்வேண்டுமா?

nathan

எவ்வித பக்கவிளைவும் இல்லாத ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்

nathan

இந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா?அப்ப இத படிங்க!

nathan

வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க… வழுக்கையில் உடனே முடி வளரும்!…

nathan

நரைமுடி, கூந்தல் உதிர்வை தடுக்க சீகைக்காய் போட்டு குளிக்க

nathan

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

nathan

கூந்தலில் நுனி பிளவா? பப்பாளி பேக் ட்ரை பண்ணுங்க

nathan