25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.0.560.320.310.730.053.800.67
மருத்துவ குறிப்பு

தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா? இதோ எளிய நிவாரணம்! இதை ஒருமுறை செய்தால் போதும்!

உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல், அல்லது வேலை செய்தல், மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் நம்மில் அனேகம் பேருக்கு தலைவலி ஏற்படுகின்றது.

இதனால் வைரஸ் பரவுவதற்கும், பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.ஆண்களைவிட பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது.

இதை தடுக்க சிறந்த வழி

மழை மற்றும் குளிர்காலங்களில் ஸ்வெட்டர், தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சுக்குக் காபி, இஞ்சி டீ, காய்கறி சூப் ஆகிய சூடான பானங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தலைக்கு குளித்த பிறகு தலையை காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்க வேண்டும். தலைவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு இலவச இணைப்பாக சளித்தொல்லையும் கண்டிப்பாக இருக்கும் என்பதால் அதை முதலில் விரட்ட முயற்சிக்க வேண்டும்.

தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது.

வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை வைத்தியம்

கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.

625.0.560.320.310.730.053.800.67
துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். தலை பாரமாக இருக்கும் போது ஆவிப் பிடித்தால், இறுகியிருக்கும் சளியானது இளகி எளிதில் வெளியேறி, தலை பாரத்தில் இருந்து விடுதலைப் பெறலாம்,

கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.

கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

,வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்,

இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.

வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.

சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.

எலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.625.0.560.320.310.730.053.80

தலை பாரத்தை சரிசெய்வதில் உப்பு ஒரு சிறந்த பொருள். காலை எழுந்த உடன் உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். அதிலும் அந்த நீரை தொண்டையில் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதனால் சளி உடனே வெளியேறி, தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.

இவ்வாறு பல வழிகள் உள்ளன. நமக்கு ஏற்ற வழிகளை தேர்வு செய்து தலைவலியை விரட்டி விடலாம்.

Related posts

ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் – அதிர்ச்சி தகவல்… !

nathan

கொலஸ்ட்ராலால் மாரடைப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை!

nathan

உங்களுக்கு தெரியுமா கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் தரும் சோம்பு…!

nathan

திடீரென உயிரைப் பறிக்கும் மாரடைப்பு பற்றி இந்த விஷயங்களையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!

nathan

இந்த 10 வழிமுறைகள் உங்களை ஆக்கும் மாஸ்டர் மைண்ட்!

nathan

தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

nathan

பெற்றோருக்கு மனவேதனை தரும் டீன் ஏஜ் பருவம்

nathan

முப்பது வயதிற்கு மேல் குடிப்பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதற்கான காரணங்கள்!!!

nathan