28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1554545
முகப் பராமரிப்பு

எளிய இயற்கை அழகு குறிப்புகள்! அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?

கற்றாழை எளிதில் கிடைப்பதால் பயன்படுத்த மாட்டீர்கள். இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது.

சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு இந்தப் பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.

வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும். இதில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.

விளக்கெண்ணெய்யை தினமும் புருவங்களில் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெய்யில், புரதச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது.

ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால், உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள்.

முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும் குறைகிறது.

வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளதால் புருவம் நன்றாக வளரும். மயிர்கால்களை நன்றாக உறுதியாக்குகிறது. வெங்காயத்தை தோள் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

8. தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடிக்காலில் இன்பெக்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம்.

தினமும், புருவத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதுவும் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கிரீம், லோஷன் போன்ற ரசாயனங்களை தவிருங்கள். புருவம் வளருவதை இது பாதிக்கும். பயோட்டின் என்ற வைட்டமின் புருவம் வளர ஏதுவான சத்து ஆகும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா தேனை முகத்தில் தடவலாமா?… தடவினா எனன ஆகும்?

nathan

ப்யூடி டிப்ஸ் !

nathan

நைட் தூங்கும் போது இப்படி ஃபுரூட் ஃபேஷியல் போடுங்க.. சூப்பர் டிப்ஸ்…

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! பரு வந்த இடத்துல கருப்பா தழும்பு மட்டும் போகவே மாட்டேங்குதா?

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்கும் அற்புத வழிகள்!

nathan

பாடிவாஷை முகத்துக்குப் பயன்படுத்தலாமா?

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி அழகாக இருக்க… இதை செய்யுங்கோ..!!

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா ஒளிரும் சருமத்தை பெற உதவும் ஜூஸ்

nathan