29.6 C
Chennai
Monday, Dec 23, 2024
15909888
சரும பராமரிப்பு

தெரிஞ்சிக்கங்க…பெடிக்யூர் செய்ய அழகு நிலையம் அவசியம் இல்லை; இதை செய்தாலே போதும்…!!

சிலருக்கு கால்களில் வெடிப்பு பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. கால்களில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க பெடிக்யூர் உபயோகப்படுத்துவது நல்லது. பெடிக்யூர் என்பது கால் விரல்களையும், பாதங்களையும் அழகுப்படுத்த மட்டுமல்லாமல் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இதனால் கால்களுக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு புத்துணர்வும் கிடைக்கிறது. பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் அழகு நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

அதன்பின் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரைஎடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து பின் அதனுள் சில நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து, பிரஷினால் கால்களைத் தேய்த்து நன்கு கழுவிய பிறகு காய்த்த துணியால் துடைக்கவும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் பாதி நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து விட்டு பிழிந்த எலுமிச்சைத் தோலை அந்த நீரிலேயே போட்டு கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும்.
அடுத்ததாக பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து கால்களை நீரில் இருந்து வெளியே எடுத்து துடைக்க வேண்டும். அது முடித்த பிறகு சிறிதளவு காபி பொடி, சிறிதளவு சர்க்கரை, கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். கடைசியாக ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, சில நிமிடம் மசாஜ் செய்யலாம்.
இவ்வாறு வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் கால் பாதங்கள் மென்மையாக இருக்கும். மேலும் குதிகால் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உச்சி முதல் பாதம் வரை அழகாக்க இந்த ஒரே பூ போதும்!

nathan

சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்வது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

அடுப்பங்கரையில் ஒளிந்திருக்கு அழகு!

nathan

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan

சருமமே சகலமும்…!

nathan

கழுத்தில் உள்ள கருமையை சீக்கிரமாக போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் பேஸ் பக்…Face pack

nathan

அவசியம் படிக்க..உடலில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டால் எந்த நோயின் அறிகுறியாக இருக்கும் தெரியுமா?

nathan

இந்த பழங்களின் தோல்கள் சரும பொலிவை அதிகரிக்க உதவும்!

nathan