24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
oxfordhealth
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்…!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்தடுப்பூசியை உருவாக்கிய ஆராய்ச்சி குழுவில் முக்கிய ஆய்வாளராக இந்தியாவைச் சேர்ந்த சந்திரபாலி தத்தா என்பவர் இருக்கிறார்.

கொல்கத்தாவை சேர்ந்த சந்திரபாலி தத்தா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனத்தில் மருத்துவ உயிரி உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா வைரஸை தடுக்கும் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பு மருந்தின் 2-ம் மற்றும் 3-ம் கட்ட சோதனைகள் இங்கு தான் நடக்கிறது.

கொல்கத்தாவில் பிறந்து அங்கேயே பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி படித்த சந்திரபாலி, கல்லூரி படிப்பு முடித்த பின் கணினி அறிவியலைப் படித்து, பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றியுள்ளார். அவரது பதின்ம வயது நண்பர் ஒருவர் நாட்டிங்ஹாமில் படிப்பதை கேள்விப்பட்டு, இவரும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பயோடெக் படிப்பில் சேர்ந்துள்ளார். வீட்டிற்கு ஒரே குழந்தையான இவர் வெளிநாடு சென்று படிப்பதை அவர் அம்மா முதலில் தயங்கியுள்ளார். அவரது தந்தைஊக்கம் அளித்ததன் விளைவாக வெளிநாடு சென்று படித்துள்ளார்.

படிக்கும் போது தனது தேவைக்கான பணத்திற்காக சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேர வேலை பார்த்துள்ளார். கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையினால் விரைவாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பணியில் சேர்ந்துள்ளார்.indian woman preparation corona vaccine prepared by

கொரோனா மருந்து கண்டுபிடிப்பு குழுவில் இருப்பது குறித்து சந்திரபாலி கூறியதாவது, எங்கள் அமைப்பு லாப நோக்கம் கிடையாது. இந்த தடுப்பு மருந்தை உருவாக்க தினமும் அதிக நேரத்தை செலவிடுகிறோம், இதன் மூலம் மனிதர்களை பேராபத்தில் காப்பாற்ற முடியும். இது ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சி, எல்லோரும் அதன் வெற்றியை நோக்கி முழு நேரமும் பணியாற்றியுள்ளனர்.

இந்த குழுவில் நான் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இத்திட்டத்தில், எல்லாம் இணக்கமாக இருக்கிறதா, தரமான இயக்க நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா, தவறுகள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதை நான் கவனித்துக் கொள்கிறேன். எங்களது பனியின் முடிவை உலகமே எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

மேனி வறண்டுபோகாமல் இருக்க டிப்ஸ்..

nathan

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika

அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்……

sangika

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

சூப்பர் டிப்ஸ்.. இதை ஒரு தடவை செய்தால் போதும் மருவை நிரந்தரமாக நீக்கும் வலியில்லாத வீட்டு வைத்தியம் !!

nathan

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – நீதிமன்றம் போட்ட உத்தரவு

nathan

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika