29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
​பொதுவானவை

கணவரிடம் மனைவி எதிர்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்கள்

கணவரிடம் மனைவி எதிர்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்கள்
கணவரிடம் மனைவி எதிர்பார்க்கும் சின்ன, சின்ன விஷயங்கள் எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், ஓர் பெண் தனது கணவன் மீது வைத்திருக்கும் ஆசை என்பது எல்லைகளற்றது. சின்ன, சின்ன விஷயங்கள் அவர்களுக்காக, அவர்களது கணவன் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அப்படி என்னென்ன அவர்கள் ஆசைப்படுகின்றனர் என்பதை பார்க்கலாம்….• திருமணத்திற்கு பிறகு அனைத்து விஷயங்களிலும் அவர்களது கணவரின் பங்கு இருக்க வேண்டும் என மனைவி விரும்புவாள். துணி மடித்து வைப்பதில், காய்கறி வாங்க உடன் வருவதில் எல்லாம் என்ன இருக்கிறது என நினைக்காதீர்கள். இதுபோன்ற சிறு, சிறு வேலைகள் செய்யும் போது தான் அவர்கள் மனம் திறந்து நிறைய பேசுவார்கள்.• திருமணத்திற்கு பிறகும் கூட அணைத்து விஷயங்களுக்கும் அம்மா பிள்ளையாக ஆண்கள் இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதற்காக அம்மாவை மறந்து விட வேண்டும என்பதில்லை. அம்மாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியை மனைவிக்கும் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

• வாரம் முழுவதும் கணவருக்கும் உழைக்கும் மனைவிக்கு வார இறுதியில் தான் சமையல் செய்யும் போது கணவன் வேண்டும் என்று விரும்புவார்கள். இதுப் போன்ற சிறு சிறு விஷயங்கள் தான் தாம்பத்திய உறவை வலுவாக்கும், இனியதாய் தொடர வழிவகுக்கும்.

• இரவு நேரங்களில், உணவு சாப்பிட்டு முடித்த பிறகு தனிமையில் அன்றைய நாளினை பற்றி முழுதாய் பேச வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுவார்கள். குறிப்பாய், கணவன் முழுதாய் அன்றைய நாளில் அவனது வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்று கூற வேண்டும் என்று விரும்புவார்கள்.

• கண்டிப்பாக வாரம் ஒருமுறையாவது கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடக்கும். அப்போது கணவன் எரிச்சல் அடையாமல் பக்குவமாய், அமைதியாய் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்.

Related posts

சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை

nathan

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?

nathan

நண்டு ரசம்

nathan

இஞ்சி தயிர் பச்சடி

nathan

விவாகரத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்

nathan

திருமணம் இருவர் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

nathan

கண்டதிப்பிலி ரசம்

nathan

ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல்

nathan

கிராமத்து கருவாட்டு தொக்கு

nathan