28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சில டிப்ஸ் –

sawar-300x229-300x229-615x469-1-615x469

கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பத்தினால் காய்ந்து போன நமக்கு மழைக்காலம் ஆரம்பத்தில் இதமாகத் தான் இருக்கும்.ஆனால் போக போக அது நமக்கு பல்வேறு சரும பிரச்சனைகளையும், கூந்தல் பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.

குறிப்பாக கோடைக்காலத்தில் அதிக பாதிப்பிற்கு உள்ளான கூந்தலானது மழைக்காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இருக்கும்.மேலும் கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அன்றாடம் தலைக்கு எண்ணெய் தடவி வருவோம்.

அப்படி தடவி வரும் போது, மழையில் நனைந்தால், முடியானது பிசுபிசுவென்று இருப்பதுடன், முகத்தில் எண்ணெய் வழிய ஆரம்பிக்கும்.அதுமட்டுமின்றி, ஈரப்பதத்துடன் எண்ணெய் பசையாக இருந்தால், கூந்தலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.எனவே மழைக்காலத்தில் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு, தலையை சரியாக பராமரித்து வர வேண்டும்.இங்கு மழைக்காலத்தில் தலையில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு முதன்மையானது ஸ்கால்ப்பின் சுத்தம் தான். ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாவிட்டால், மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பசையினால் பூஞ்சைகள் வளர்ந்து, அரிப்புகளுடன், துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.

எனவே வாரத்திற்கு மூன்று முறை தவறாமல் தலையை ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் பூஞ்சைகள் படிவதைத் தடுக்கலாம்.

மழைக்காலத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் ஷாம்புவைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை இன்னும் கூந்தலில் எண்ணெய் பசையை அதிகரித்து, துர்நாற்றத்தையும் அதிகரிக்கும்.எனவே எண்ணெய் பசை முடி கொண்டவர்கள், மைல்டு ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டும். அதிலும் ஷாம்புவிற்கு பதிலாக, நெல்லிக்காய், சீகைக்காய் மற்றும் பூந்திக்கொண்டை போன்றவற்றைக் கொண்டு கூந்தலைப் பராமரிப்பது இன்னும் சிறந்தது.

கூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதிலும் கண்ட கண்ட ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தாமல், விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும் அல்லது இயற்கையான ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும். இருந்தாலும், இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள்.

அதிலும் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சீடர் வினிகர் போன்றவற்றைப் பயன்படுத்தி கூந்தலை அலசுவது இன்னும் சிறந்தது.

நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு உண்ணும் உணவுகளும் முக்கியமான ஒன்று. எனவே தினமும் நல்ல அளவில் நீரைப் பருகுவதுடன், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இதனால் உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும். முக்கியமாக காப்ஃபைன் உள்ள பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஏனென்றால், இவை வியர்வையை அதிகரித்து, ஸ்கால்ப்பை பிசுபிசுவென்று மாற்றும். மேலும் ஆல்கஹால் அதிகம் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வியர்வையின் அளவு அதிகரிக்கும்.

உங்களுக்கு ஹேர் ஸ்ட்ரைனிங், ஹேர் கலரிங் போன்றவற்றை செய்ய வேண்டுமென்று இருந்தால், மழைக்காலம் முடியும் வரை பொறுத்திருங்கள்.

ஏனெனில் மழைக்காலத்தில் இந்த செயல்களை மேற்கொள்ளும் போது, கூந்தலில் பாதிப்பு அதிகரிப்பதுடன், ஸ்கால்ப்பும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே இந்த செயல்களை கொஞ்ச காலத்திற்கு தள்ளி வையுங்கள்.

Related posts

பளபளப்பான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற சூப்பர் டிப்ஸ்

nathan

முடி கொட்டுவதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்! மருத்துவ டிப்ஸ்!!

nathan

ஆண்களே! அடர்த்தியான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்…

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை எப்படி உபயோகப்படுத்தலாம் என தெரியுமா?

nathan

அழகான கூந்தலுக்கு…

nathan

ஆண்களே! முடி அதிகமா கொட்டுதா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க…

nathan

உங்கள் கூந்தல் அடர்த்தியாகனுமா? வாரம் ஒருமுறை இந்த சித்த மருத்துவ குறிப்புகளை யூஸ் பண்ணுங்க!!

nathan

ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க…

nathan

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த பாட்டி வைத்தியத்தை முயன்று பாருங்கள்!

nathan