28.6 C
Chennai
Friday, Dec 12, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்

c2df3bfa-dd5a-41c0-9818-cc503f21071c_S_secvpf.gif-300x225இன்றைய இளம் பெண்கள் தங்கள் சருமத்தை அழகாக்க கடைகளில் கிடைக்கும் பல்வேறு வகையான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துகின்றன. ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் எந்த பலனும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

இவர்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய இந்த ஃபேஸ் பேக்கை பயன் படுத்தி சருமத்தை பொலிவாக்கலாம். இந்த ஃபேஸ் பேக்கை வீட்டிலிலேயே தயாரிக்கலாம். செய்வதும் மிகவும் எளிமையானது. இப்போது இந்த ஃபேஸ் பேக்கை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

• கடலை மாவு – இது சருமத்தில் பருக்கள் வருவதை தடுத்து சருமம் கருமை அடைவதை தடுக்கிறது.

• வெள்ளரிக்காய் – இது வெயில் காலத்தில் சருமத்தில் வேர்குரு வருவதை தடுக்கிறது.

• கேரட் விழுது – இது சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது. மேலும் சூரியனின் கடுமையான கதிர் வீச்சில் இருந்து தோலையும், தோல் திசுக்களையும் பாதுகாக்கிறது.

• தேன் – இது சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

• குளிர்ந்த பால் – இது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக்குகிறது.

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கடலை மாவை போட்டு இதில் 1 ஸ்பூன் வெள்ளரிக்காய், கேரட் விழுதை சேர்க்கவும். அடுத்து அதில் அரை ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.

இந்த ஃபேஸ் பேக் போட்டிருக்கும் போது சிரிக்கவோ, பேசவோ கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். – இந்த ஃபேஸ் பேக் இயற்கை அழகுடன் உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும்.

Related posts

தினமும் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடி

nathan

வயது வந்தவர்களுக்கு ஏற்படும் பருக்கள் பிரச்னை உங்களை வாட்டுகிறதென்றால் இதைப் படித்தால் நீங்கள் அறிந்து கொள்ளலாம்..

nathan

இப்படி ஒரு அபார சக்தியா.?இரத்த அணுக்களை உருவாக்கும், பீட்ரூட்டில் !

nathan

பல மருத்துவ குணங்கள் நிறைந்த சிவப்பு கொய்யா !தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan

உடல் துர்நாற்றத்தை போக்க எளிய இயற்கை வழிகள்!

nathan

சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்

nathan

தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்… வடகொரியா அதிபர் கிம்

nathan

அழகாக இருக்க எளிய வழி,

nathan