தற்போது சருமத்தில் அலர்ஜி அதிகம் ஏற்படுகிறுது. சருமத்தில் ஆங்காங்கு தடிப்புக்களாக சிவப்பு நிறத்தில் இருப்பதோடு, அரிப்புக்களையும் ஏற்படுத்துவது தான் அலர்ஜி.
அரிப்புக்கள் வர ஆரம்பித்தால், எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது. எப்போதும் சொரிந்து கொண்டே இருக்க வேண்டியவாறு இருக்கும். சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் சருமத்தில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படும் போது சருமம் அரிக்க ஆரம்பிக்கும்.
ஆனால் சருமத்தில் அரிப்புக்கள் அதிகமாகும் போது அது மிகவும் தீவிரமான பிரச்சனையையும் ஏற்படுத்தும். ஆகவே அந்த நிலையில் உடனே மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இங்கு சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட என்னென்ன காரணங்கள் உள்ளன என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.