25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
33175e304
அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா அழகு பராமரிப்பில் பயன்படும் அரிசி கழுவிய நீர்…!!

அரிசி கழுவிய நீரானது அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றை பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தை கழுவும்போது அரிசி கழுவிய நீரால் முகத்தை கழுவ வேண்டும். அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

தளர்ந்திருக்கும் சருமத்தை இறுக செய்திடும்.
அரிசி கழுவிய நிறை தினமும் பேஷியல் க்ளிசராக பயன்படுத்தலாம். சிறிய துணியிலோ அல்லது காட்டனை அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து முகத்தை துடைத்திடுங்கள். சிறிது நேரத்தில் தானாக காய்ந்திடும். கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் வினைபுரியும்.
கூந்தல் அதிக வறட்ச்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால். அப்போது அரிசிகளுவிய நீரால் கூந்தலை அலசி சிறிது நேரம் காத்திருந்து பின்பு சுத்தமான நீரால் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் காணப்படும்.

அரிசி கழுவிய நீரை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும்.
அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

Related posts

வெண்ணெய்யை பயன்படுத்தி பாருங்க…!! சருமம் பொலிவுடன் இருக்க

nathan

சூப்பரான முட்டை பிரை

nathan

தனுஷ் ஐஸ்வர்யா அதிரடி முடிவின் பின்னணி இதுதான்?சிம்புதான் காரணம்…

nathan

எப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கு இத செய்யுங்கள்….

sangika

35 வயதில் ஜொலிக்கும் சமந்தாவின் அழகு ரகசியம் இதுதானாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

இத படிங்க விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!

nathan

மகத்துவமான மருதாணி:

nathan

முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்துவது முகம் வெள்ளையாவதற்கு?

nathan

உதடு சிவக்க

nathan