28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
97ee4c753cecd
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா முகம் ஜொலிக்க வேறெதுவும் தேவையில்லை… தேங்காய் எண்ணெய் போதும்!!

ஒரு துளி தேங்காய் எண்ணெய்யை கண்களுக்குக் கீழ் தேய்த்து மசாஜ் செய்து அப்படியே விட்டால் கண்கள் இழந்த பொலிவைப் பெறும். முகத்தை அழகாக்கி கொள்வதற்கு ஆண், பெண் என்ற எந்த பாகுபாடுமின்றி சில நூறு ரூபாய் நோட்டுகளை சரளமாக செலவழிக்க தயாராக இருக்கிறோம். அழகே ஒருவருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இன்றைய பெண்களுக்கு தைரியம் ஏற்படுவதற்கு தங்களைத் தாங்களே அழகுபடுத்திக் கொள்வதும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இவ்வாறாக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண தேங்காய் எண்ணெயை வைத்துக் கொண்டு எப்படி பேரழகாக மாறலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் காணவிருக்கிறோம். தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது.

உச்சி முதல் பாதம் வரை தேங்காய் எண்ணெயால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய் ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்க வல்லது. மேலும் சில வகை கிருமிகளையும் எதிர்த்துப் போராடுகிறது. தேங்காய் எண்ணெயை தலைக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நன்மைகள் தரக் கூடிய ஆற்றல்கள் நிறைந்திருக்கின்றன.

தேங்காய் எண்ணெய் முகத்திற்கு எல்லா வகையிலும் பயன்படுகின்றன. ஃபேஸ் வாஷ் ஆகவும், மாய்ஸ்சுரைசராகவும், க்ளென்சராகவும், ஸ்க்ரப்பராகவும், சன் ஸ்க்ரீனாகவும் கூட பயன்படுத்த முடியும். மாய்ஸ்சரைஸர் : வறண்ட சருமம் இருப்போர் அல்லது பனிக் காலம், மழைக் காலங்களில் சருமம் எளிதில் வறட்சி அடையும். அப்போது தேங்காய் எண்ணெய்யை முகம், கை கால்களில் தடவிக் கொள்வதால் சரும வெடிப்பைத் தவிர்க்கலாம்.

சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும்: சருமத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் படும்போது சுட்டெரிக்கும். அதொடு கருமையான லேயர் உருவாகிவிடும். இதைக் கட்டுப்படுத்த முகம் மற்றும் கை கால்களில் தேங்காய் எண்ணெய்யை பாதுகாக்கும் லேயராக அப்ளை செய்தால் சூரிய வெளிச்சம் நேரடியாகப் படாது. அதேசமயம் ஈரப்பதத்தையும் அளிக்கும்.

கண்களுக்கான கிரீம்: கண்களுக்குக் கீழ் கருமை, வீக்கம் என அழகைக் கெடுக்கும் வகையிலான பிரச்னைகளுக்கு கிரீம்கள் எதுவும் தேவையில்லை தேங்காய் எண்ணெய் போதும். ஒரு துளி தேங்காய் எண்ணெய்யை கண்களுக்குக் கீழ் தேய்த்து மசாஜ் செய்து அப்படியே விட்டால் கண்கள் இழந்த பொலிவைப் பெறும். மேக்அப் ரிமூவர்: தினமும் மேக் அப் அப்ளை செய்கிறீர்கள் ரிமூவர் திடீரென தீர்ந்துவிட்டாலோ அல்லது வாங்கிக் கட்டுப்படியாகவில்லை என்றாலோ கவலையே வேண்டாம். தேங்காய் எண்ணெய்யை காட்டனில் முக்கி துடைத்து எடுங்கள்.

ஃபேஸ் மாஸ்க்: தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் அல்லது பேக்கிங் சோடா ஏதேனும் ஒன்றை கலந்து நன்குக் கலக்கி முகத்தில் தேய்த்து 7 – 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவுங்கள். மென்மையான சருமம் கிடைக்கும். ஃபேஸ் ஸ்க்ரப்: தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து முகம் முழுவதும் வட்டப் பாதையில் 5 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்தால் அழுக்கு, இறந்த செல்கள் அடியோடு அகன்றுவிடும். பிரைமர்: திடீரென பிரைமர் தீர்ந்துவிட்டால் கவலையே வேண்டாம். தேங்காய் எண்ணெய்யை அப்ளை செய்து மேக்அப்பை தொடங்குங்கள்.

Related posts

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika

உங்களுக்குதான் இந்த விஷயம்! எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க…

nathan

பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் சாப்டாக மாற வேண்டும்.

nathan

கன்னம் மட்டுமாவது கொழுகொழுவென இருக்க

nathan

இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புருவங்ளை பராமரிக்க எளிய வழிகள்

nathan

முகப்பரு மற்றும் முக வடுவை நீக்கி உங்க சருமத்தை ஒளிர செய்ய

nathan

ரோசாசியா என்றால் என்ன?

sangika

முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறதா,tamil ladies beauty tips

nathan