29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 honeyandlemon
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு பாராமல் பனி நாள் முழுவதும் கொட்டிக் கொண்டிருக்கிறது. அதிகப் பனிப்பொழிவால் பலரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக இருமலால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். ஒருவரது உடலில் சளித் தேக்கம் அதிகம் இருந்தால், அந்த சளியானது வெளியேறும் கட்டத்தில் மூக்கு பகுதியில் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சளி நுரையீரலில் தேங்கியிருந்தால், அது சுவாசப் பாதையில் இடையூறை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க வைப்பதோடு, தொடர் இருமலையும் உண்டாக்கும். நீங்கள் இப்படி தொடர் இருமலுடன், மூக்கு பகுதியில் சளியின் துர்நாற்றம் வீசினால், அந்த துர்நாற்றம் நிறைந்த சளியை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் வெளியேற்றலாம். உங்களுக்கு நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள சளியை எளிய வழியில் வெளியேற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால், தொடர்ந்து படியுங்கள்.

வழி #1

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சுவாசக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்வதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த இரண்டு பொருட்களின் கலவையும் சளி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.2 honeyandlemon

தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்

* தேன் – 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

* ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை தினமும் மூன்று முறை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேற ஆரம்பிக்கும்.

வழி #2

ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் pH அளவை சீராக்கும் மற்றும் சுவாசக் குழாயில் தேங்கியுள்ள சளியை இளகச் செய்வதோடு, சளி உருவாவதைத் தடுக்கும்.

இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள பிரச்சனை அனைத்தும் குணமாகும்.

வழி #3

இஞ்சி, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் உள்ள சளியை நீக்கக்கூடியது. ஏனெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சளி நீக்க பண்புகள் உள்ளன. அத்தகைய இஞ்சியை ஒருவர் தினமும் 3-4 துண்டுகள் உட்கொண்டு வாந்தாலோ அல்லது இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் 2 கண் குடித்து வந்தாலோ, இறுக்கமடைந்த சளி இளகி வெளியேறும்.

வழி #4

தேவையான பொருட்கள்:

* தேன் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 2 கப்

* இஞ்சி – 6-7 துண்டுகள்

* மிளகு தூள்- 1 டீஸ்பூன்6 ginger pepper 1

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி மற்றும் மிளகு சேர்க்க வேண்டும்.

* பின் மூடியைக் கொண்டு பாத்திரத்தை மூடி, மிதமான தியில் வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அடுப்பை அணைத்து, கலவையை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

* இந்த அற்புதமான டீ உடலில் உள்ள சளியை காணாமல் போகச் செய்யும்.

Related posts

சளித்தொல்லையில் இருந்து விடுபட அருமையான வைத்தியம்!

nathan

தெரிந்துகொள்வோமா? இப்படியெல்லாம் செஞ்சா இரட்டைக் குழந்தை பிறக்கும்-ன்னு சொன்னா நம்பாதீங்க…

nathan

சர்க்கரை நோய் இருக்கா? அப்ப மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

nathan

வேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் தனிமை

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் உசிலமரம்

nathan

இன்னுமா உங்க குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறது? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் இரத்த சுழற்சி குறைவாக இருக்குனு அர்த்தம்…

nathan

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் நடக்கும் அற்புதம் என்ன தெரியுமா?

nathan