25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
17 15082
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… தைராய்டு ஏற்படுவதற்கான முழு அறிகுறிகளும்.. பாதிப்புகளும் என்னென்ன தெரியுமா?

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான்.

இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது.

புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம்.

பாரா தைராய்டு நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும்.

சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது.

அறிகுறிகள்:
தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம்.

கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும்.

Related posts

நாவூறும் யாழ்பாணத்து ஒடியல் கூழ் செய்முறை விளக்கம்

nathan

சளியை விரட்டும் துளசி

nathan

உங்க மார்-பகம் குட்டியா இருக்கா? பெரிதாக்க உதவும் உணவுகள்!

nathan

உடல் பிரச்சனைகளை போக்கும் கிராம்பு வைத்தியம் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களால் 45 நொடியில் இதனை செய்ய முடியலனா உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்…

nathan

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

nathan

தெரிஞ்சிக்கங்க…சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது? அப்ப எவ்வளவு நேரம் கழிச்சு குளிக்கலாம்?

nathan

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பாதிப்புக்கள் என்ன? கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

nathan