ஆரோக்கியம்உடல் பயிற்சி

கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைய…

56716091-d4b8-4061-be9a-d4e99e44629f_S_secvpfசிலர் பார்க்க ஒல்லியாக இருந்தாலும் கால்களில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டால் பார்கக நன்றாக இருக்காது. இவர்கள் கீழே உள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் விரைவில் கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைந்து அழகாக காட்சி தரும்.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி குப்புற படுத்துக் கொள்ளவும். பின்னர் கைகயை தரையில் முட்டி வரை ஊன்றி, கால் பாத முன் விரல்களை தரையில் தாக்கிய படி உடலை மேல் நோக்கி (படத்தில் உள்ளபடி) தூக்கவும்.

இந்த நிலையில் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து கொண்டே வலது காலை முட்டி வரை மடக்கி முன்னோக்கி மடக்கவும். இடது காலை மடக்காமல் நீட்டியபடியே இருக்க வேண்டும். வலது காலால் வலது கை முட்டியை தொட முயற்சிக்க வேண்டும்.

இந்த பயிற்சியை ஆரம்பத்தில் செய்ய மிகவும் கடினமாக இருக்கும். பின்னர் நன்கு பழகிய பின்னர் முட்டியை தொட சுலபமாக வரும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். உங்களால் முடிந்தால் அதிக எண்ணிக்கையிலும் செய்யலாம்.

எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைக்கும். பின்னர் கால்களை மடக்கி இடது காலில் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை காணலாம்.

Related posts

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

பெண்களுக்கு தற்காலத்தில் அதிகமாக பாதிக்கும் நோய் தான் கற்பப்பை புற்று நோய்! அவதானமாக இருக்க இத படிங்க!..

sangika

பெண்களே அவதானம் உங்களுக்கு இவ்வாறான அறிகுறி உண்டா?

sangika

வீட்டுக் குறிப்புகள் சில பயனுள்ள குறிப்புகள்……

nathan

வலிமை தரும் பயிற்சி

nathan

ஆண்மையை அதிகப்படுத்தும் ஆசனம்

nathan

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

nathan

புரியாத புதிராக விளங்கும் இந்த ஆழமான காதல்…..

sangika

தைராய்டு ஒரு காரணம் குழந்தையின்மை பிரச்சினைக்கு!….

nathan