27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
625.500.560.350.160.300.05 4
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்

துளசி இலைச்சாறு 150 மில்லி, கற்கண்டு, இவை இரண்டையும் கலந்து, சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீ ஸ்பூன் அளவு, தினசரி இருவேளை உட்கொண்ட பின், பசும்பால் அருந்தலாம்.இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.கண்களில் நீர் வடியும் பிரச்சனை உள்ளவர்கள், தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால், நீர் வடிதல் குணமாகும்.

தூய்மையான தாய்ப்பாலில், இரு துளியைக் கண்களில் விட்டால், கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச் சாற்றில், சில துளிகளை மூக்கில் விட்டால், மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப் பொடித்து, பசும் பாலில் கலந்து உட்கொண்டால், தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து, நெருப்பு அனலில் இட்டு, புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அதை சூடு படுத்தி, சிறிது தேன் கலந்து, நாள் ஒன்றுக்கு 3 வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு, உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை, வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றைப் பருகினால், வறட்டு இருமல் குணமாகும்.தேனையும், எலுமிச்சை பழ சாற்றையும், சம அளவில் உட்கொண்டால், சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை பறந்தோடிப் போகும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வர நேரிடும்

nathan

மன அழுத்தம் உடலின் பல பாகங்களை பாதிக்கும்

nathan

அவசரப்பட்டு பேசும் வார்த்தைகளில் ஆபத்து அதிகம்

nathan

விடாமல் விரட்டும் விக்கல் ஏன்? தீர்வு என்ன?

nathan

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

nathan

யாழ். குடாநாட்டு நீரில் நைத்திரேற்று அதிகரிப்பை தடுப்பதற்கு -சு.சரவணன்

nathan

வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

குடும்பத்தில் அன்பும், காதலும் ஆயுள்வரை தொடரவேண்டும்

nathan

வாய் நீர் சுரப்பிற்க்கான-சித்த மருந்து

nathan