26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
4 colon cleansing
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு மாத்திரை எதுவும் போடாமல் குடலை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களா? அமெரிக்காவில் சுமார் 15 சதவீத மக்கள் நாள்பட்ட மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒருவரது குடலில் கழிவுகள் அதிகம் தேங்கினால், அது பல நோய்களுக்கு வழிவகுக்கும். நமது உடலில் குடல் பல்வேறு அத்தியாவசிய செயல்பாடுகளை செய்கின்றன. குடல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உப்பு மற்றும் நீரை கழிவுகளில் வெளியேற்றுவதற்கு முன்பு பிரித்தெடுக்கிறது, pH அளவைப் பராமரிக்கிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது.

ஒருவரது குடல் சரியாக செயல்படாமல் இருந்தால், அது சரும அழற்சி, பித்தப்பை கற்கள், இதய நோய்கள் போன்ற கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இதைத் தவிர்க்க ஒரு எளிய வழியாக பலர் கண்டறிந்திருப்பது குடல் சுத்திகரிப்பு ஆகும். இப்போது மாத்திரை எதுவும் போடாமல் இயற்கையாக குடலை சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள் ஊட்டச்சத்துக்களின் கிடங்கு ஆகும். அதுவும் பசலைக்கீரை, கேல், அஸ்பாரகஸ், கொலார்டு கீரைகள், பட்டாணி போன்றவற்றில் குளோரோஃபில் அதிகம் உள்ளது. இது குடல் பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இந்த காய்கறிகள் கல்லீரலையும் சுத்தம் செய்கிறது மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நச்சுக்களில் இருந்து உடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதற்கு இந்த காய்கறிகளை வேக வைத்தோ, சூப்பில் சேர்த்தோ அல்லது வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் சேர்த்து வதக்கியோ சாப்பிடலாம்.

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன மற்றும் இது செரிமானத்தைத் தூண்டக்கூடியது. இஞ்சியை ஜூஸாகவோ அல்லது அப்படியேவோ மென்று சாப்பிடலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் இஞ்சி ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து, இந்த கலவையை தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.

இஞ்சி ஸ்மூத்தி

இஞ்சியை வித்தியாசமாக சாப்பிட நினைப்பவர்கள், அதைக் கொண்டு ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம். அதற்கு தேவையான பொருட்களாவன:

* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்

* ஆப்பிள் – 1

* பசலைக்கீரை – 1 கப்

* கேரட் – 1

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1 கப் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இஞ்சி ஸ்மூத்தி தயார். இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்தால், குடல் பாதையின் செயல்பாடு சரியாக நடைபெறும்.6 fiber 15307

ஆப்பிள் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

ஆப்பிள் மற்றும் எலுமிச்சை என இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் அதிகம். இவற்றில் செரிமான செயல்பாடுகளை மேம்படுத்த தேவையான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவை உள்ளன. இந்த இரண்டு பொருட்களைக் கொண்டு சுவையான பானம் தயாரிக்கலாம்.

* 1/2 கப் ஆப்பிள் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் 1/2 கப் வெதுவெதுப்பான நீரை, அந்த ஜூஸ்களுடன் சேர்த்து கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், குடல் சுத்தமாவதுடன், செரிமானமும் சிறப்பாக நடைபெறும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

வடிகட்டப்படாத ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் இருந்து கழிவுகள வெளியேற்ற உதவும். அதே சமயம் பயனுள்ள பாக்டீரியாக்களை உடலிலேயே தங்க வைக்கும். இத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரை தேன் சேர்த்து உட்கொண்டால், அது குடலை சுத்தமாக்குவதோடு, செரிமான மண்டலத்தையும் சிறப்பாக செயல்படச் செய்யும்.

* 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 கப் நீர் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்க வேண்டும். இந்த பானம் டாக்ஸின்களை நீங்குவதோடு மட்டுமின்றி, சர்க்கரையை நோயைத் தடுப்பது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுப்பது போன்ற படலவேறு நன்மைகளையும் தன்னுள் கொண்டது.

நார்ச்சத்துள்ள உணவுகள்

குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், குடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்வதற்கும், நார்ச்சத்து பெரிதும் உதவி புரியும். அதிலும் பீன்ஸ், பருப்பு வகைகள், திணை, ஓட்ஸ அல்லது காய்கறிகளான பீன்ஸ், புருஸல்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது .

கல் உப்பு மற்றும் நீர்

உடலை சுத்தம் செய்வது என்று வரும் போது அதில் தண்ணீர் முக்கிய பங்கை வகிக்கிறது. குடல் வறட்சியுடன் இருக்கும் போது, டாக்ஸின்கள் அப்படியே குடலின் உட்பகுதியில் எளிதில் தங்கிவிடும். எனவே குடல் ஆரோக்கியத்திற்காக ஒருவர் ஒரு நாளைக்கு 2 முதல் 2.5 மிலி வரை நீர் பருக வேண்டியது அவசியம்.

* அதுவும் 1/2 விட்டர் நீரில் 1 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இச்செயலால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.

சியா மற்றும் ஆளி விதைகள்

இந்த இரண்டு விதைகளிலுமே நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது குடலில் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் டாக்ஸின்கள் தேங்கியிருப்பதை நீக்கும். அதற்கு இந்த விதைகளை நீரில் சேர்த்து ஊற வைத்து, சாலட்டுகள், மில்க் ஷேக் போன்றவற்றின் மேலே தூவி உட்கொள்ளலாம்.

* ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் நீரில் 5-10 நிமிடம் வரை ஊற வைத்தால், அதில் உள்ள நார்ச்சத்து நீரை நன்கு உறிஞ்சுவதன் மூலம், உடலினுள் உகந்த செயல்பாட்டை செய்ய முடியும்.

* பின் அந்த விதைகளை ஒரு கப் தயிருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த கலவையை ஒரு நாளைக்கு 4 முறை என தொடர்ந்து 4 வாரங்கள் உட்கொண்டால், குடல் பாதை சுத்தமாகும்.

குறிப்பு

தற்போது மார்கெட்டில் குடலை சுத்தம் செய்யும் பல்வேறு சப்ளிமெண்ட்டுகள் கிடைக்கின்றன. குடல் சுத்திகரிப்பு என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இச்செயலால் குடலில் இருந்து பாக்டீரியாக்கள் நீக்கப்படுவதோடு, செரிமானம் மேம்படும். அதோடு உடல் எடை குறையும் மற்றும் பல்வேறு நோய்களும் தடுக்கப்படும்.

Related posts

இப்படி ப்ரபோஸ் பண்ணா பிடிக்கும் – பெண்களின் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும்!

nathan

இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்…

nathan

உங்களுக்கு பல வித நோய்களை குணமாக்கும் பாட்டி வைத்திய முறைகள் தெரியுமா..!!

nathan

தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் இரத்த போக்கின் நிறத்தை வைத்து உங்களின் ஆரோக்கியத்தை அறியலாம்!!

nathan

வயிறு உப்புசம் குறைக்கும் பாட்டி வைத்தியம்

nathan

மலச்சிக்கலைப் போக்கும் வழிகள்

nathan

ஆஸ்துமாவை குணமாக்கும் தேன்

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா? சில எளிய இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்

nathan