25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
3 1582
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…தூக்கமின்மையால் அவதிபடுறீங்களா?

தூக்கம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. தூக்கம் நம் ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தூக்கமின்மை உடல் நல ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் பல நோய்களுக்கு வழிவகுக்கும். வளர்ந்துவரும் நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை, பணிச்சுமை, உணவுப்பழக்கம் ஆகிய காரணங்களால் பலர் தூக்கமின்மையால் தவித்து வருகின்றனர். மேலும், தூக்கம் வராததால், தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இயற்கையாக வரும் எதையும், நாம் செயற்கையால் கொண்டுவர முயலும்போது, அதற்கான பக்கவிளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும். இயற்கையான நல்ல ஆழ்ந்த தூக்கம்தான் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

தூக்க மாத்திரையை எந்தளவு பயன்படுத்த வேண்டும்? யார் பயன்படுத்தலாம்? என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், அளவுக்கு மீறி நீங்கள் தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, இது உங்கள் உடலில் பக்கவிளைவு ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். பின்னர், எப்படி நாங்கள் தூங்குவது? என்று தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கேள்வி எழலாம். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இயற்கையாக உங்களுக்கு தூக்கம் வருவதற்கான ஒரு விஷயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரையில் இதுகுறித்து காணலாம்.1 15

தூக்கமின்மையின் விளைவுகள்

தூங்குவதில் சிக்கல் உள்ள ஒருவருக்கு மட்டுமே அதனுடன் தொடர்புடைய வலியை புரிந்து கொள்ள முடியும். நாள்பட்ட சோர்வு, மனநிலையில் மாற்றங்கள் மற்றும் தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்படுவதைத் தவிர, தூக்கமின்மை பல உடல் மற்றும் உணர்ச்சி வியாதிகளுக்கு காரணமாகிறது. ஆதாலால், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான தீர்வுகளை எப்போதும் தேடிக்கொண்டிருப்பார்கள். தூக்க மாத்திரை அவர்களுக்கு அப்போது சரியானது என்று தோன்றலாம்.

புதிய ஆய்வு

இந்த பிரச்சனையிலிருந்து பெரும்பாலான மக்களை விடுவிக்க, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் ஒரு புதிய வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள், ஒரு புதிய மருந்தை கண்டுபிடிக்கவில்லை. உங்கள் மன அழுத்ததை குறைத்து மன அமைதி தரக்கூடிய ஒரு உளவியல் செயலைதான் அவர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

துணையின் ஆடை

உளவியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உங்கள் துணையின் வாசனை உங்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் காதலன் அல்லது காதலியின் வாசனை இருக்கும் ஆடை போன்ற துணியால் மூடப்பட்ட தலையணை மற்றும் அவற்றை போத்திக்கொண்டு நீங்கள் தூங்கினால், நீங்கள் நன்றாக தூங்குவீர்கள். சாதாரணமாக நீங்கள் தூங்குவதை காட்டிலும், ஒப்பீட்டளவில் நீண்ட நேரம் நீங்கள் நன்றாக தூங்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்கும்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், உங்கள் துணையின் வாசனையை சுமக்கும் அடையை அணிவது மன அழுத்தம், தனிமை மற்றும் பதட்டம் ஆகியவற்றை குறைக்க உதவுவதாகத் தெரிவித்துள்ளனர். உங்கள் துணையின் ஆடையின் வாசனை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உறவும், ஆரோக்கியமும்

நம் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல, நெருங்கிய உறவுகளும் அவசியம் என்பதை இதுபோன்ற ஆய்வுகள் சான்றுகளாக இருக்கின்றன. ஆனால் உறவுகள் மற்றும் சமூக ஆதரவு செயல்முறைகளில் துணையின் ஆடை வாசனையை பற்றி சரியாக எந்த தகவலும் தெரிவதில்லை. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியரான பிரான்சிஸ் சென் கூறுகையில், தன் காதலன் அல்லது காதலி அல்லது துணையின் வாசனை தூக்க திறனை மேம்படுத்துகிறது என்பதற்கு தற்போதைய ஆய்வு புதிய சான்றுகளை வழங்குகிறது என்றுள்ளார்.

தூக்கத்தின் தரம்

தூக்கத்தின் தரம் மற்றும் ஒரு காதலன் அல்லது காதலியின் வாசனை ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த, ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான பரிசோதனையை மேற்கொண்டனர். சோதனையில் பங்கேற்ற ஒவ்வொரு பாலின தம்பதிகளின் ஒரு கூட்டாளரிடமும், தொடர்ந்து 24 மணி நேரம் அவர்களின் துணையின் ஆடையை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது.

சில விதிகள்

தங்கள் துணையின் டி-ஷர்ட்டை மட்டும் அணிய வேண்டும் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது போன்ற சில விதிகளை சோதனையின்போது பின்பற்றியிருந்தனர். 24 மணி நேரத்திற்குப் பிறகு, சட்டை அணிந்த நபரின் அந்தந்த துணைகளுக்கு இரண்டு சட்டை வழங்கப்பட்டது. ஒன்று காதலன் அணிந்திருந்தது மற்றும் மற்றொருவரின் ஆடை.

கூடுதல் நேரம் தூக்கம்

தங்கள் துணையின் ஆடை தலையணையில், டி-ஷர்ட்டுகளுடன் தூங்க வைக்கப்பட்டனர். காதலரின் டி-ஷர்ட்டைச் சுற்றி ஒரு தலையணையில் தூங்கியவர்கள், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கூடுதல் நேரம் தூங்கினார்கள். பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு காலையிலும் தூக்கத்தின் தரம் குறித்த சுய-அறிக்கை நடவடிக்கைகளை வழங்கினர். இது இரவில் தங்கள் துணையின் வாசனையுடன் தூங்குவதாக நினைத்தார்கள்.3 1582

ஆரோக்கியத்திற்கு நன்மை

தங்கள் அன்புக்குரியவர்களின் வாசனை நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கிறது என்று ஆய்வின் முடிவில் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்பட்டியிருந்தால், உங்கள் துணையின் ஆடையின் வாசனையின் தூங்குங்கள். இது உங்கள் உறவையும் வலுபடுத்தும். பயணத்தின் போது உங்கள் துணையின் ஆடைகளை உடன் எடுத்துச் செல்வது போன்ற எளிய உத்திகள் உங்கள் தூக்கத்தில் அளவிடக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

Related posts

காலையில் எழுந்ததுமே சோர்வா இருக்கா..?

nathan

உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்…

nathan

உங்களுக்கு தெரியுமா மக்கள் ஏன் வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்னையை விரட்ட வேண்டுமா? இதை மட்டும் இனி செய்யுங்க

nathan

படிக்கத் தவறாதீர்கள்! இந்த நோய் உள்ளவர்கள் 30 நிமிடங்கள் பூண்டை வாயில் இப்படி வையுங்கள் ?

nathan

இந்த 10 தவறுகளைச் செய்யாதீர்கள் இளைஞர்களே

nathan

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு போக்குவது எப்படி ?

nathan

மதுவை மறக்க ஹோமியோவில் முடியமா ?

nathan

அடிக்கடி மேல் வயிறு வலிக்கிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan