ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான முக பாவனைகள் இருப்பது இயற்கை தான். அதேபோல் தான் முகச்சுருக்கம் என்பதும். சிலருக்கு இளம் வயதிலும், சிலருக்கு வயதான பிறகும் முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும். இவற்றில் இளம் வயதில் சுருக்கம் வருவது என்பது ஒருவரது வாழ்வில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். தங்களது கனவில் இவை தடையை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை கூட அதிகமாக தோன்றிவிடும்.
முகத்தில் சுருக்கம் வந்தால் வயதாகிவிட்டது என்பது மட்டுமே காரணம் கிடையாது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் கோபப்படும் போது, ஆச்சரியப்படும் போது, வலி ஏற்படும் போது கூட நெற்றியில் சுருக்கம் ஏற்படும். இனி அதை கவனித்து பாருங்கள். சுருக்கம் என்பது மூன்று வகைப்படும். முதல் சுருக்கம் என்பது, கண்களின் ஓரங்களில் ஏற்படக்கூடியது. இரண்டாவது, முகத்தில் தோன்றகூடியது. அடிக்கடி ஒரே மாதிரியான முக பாவனையை செய்வதன் மூலம் இது ஏற்படக்கூடும். பாதிப்படைந்த சருமம், புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது சூரியனின் புறஊதாக்கதிர்களின் தாக்கம் போன்வற்றால் கூட முகத்தில் சுருக்கம் தோன்றலாம். கடைசி வகை சுருக்கமானது, கழுத்து பகுதியில் வரக்கூடியது. வயதாவதினால் ஏற்படக்கூடிய பிரச்சனை இது. பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும்.
முகம், நெற்றி அல்லது கழுத்து போன்ற பகுதியில் சுருக்கம் ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்காக இங்கே சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தெரிந்து நடப்பதன் மூலம் சுருக்கத்தை விரட்டிடலாம். முதலில், இந்த மூன்று வகை சுருக்கங்களும் ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
வயது
வயதாகிறது என்பதை உணர்த்தும் ஒரு இயற்கை அறிகுறி தான் சுருக்கம் ஆகும். முகத்தில் உள்ள செல்கள் உடைந்து, அதன் உட்படலமானது லேசாக தொடங்கும். சருமத்தின் புரதமானது படிபடியாக குறையத் தொடங்கும். சருமம் நீளுவதற்கு காரணமான கொலாஜன் அதில் காணப்படுகிறது. வெளிப்புற சருமத்தை ஆதரிக்கக்கூடிய கொலாஜனானது, தோலை தளர்வடைய செய்கிறது.
புகைப்பிடித்தல்
வயதாகி சுருக்கம் வந்தால் சரி என்று விட்டு விடலாம். வயதாகாமலேயே, சிறு வயதிலேயே சுருக்கம் ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது தான் புகைப்பிடிக்கும் பழக்கம். புகையிலையானது, சிறு இரத்த நாளங்களை குறுக செய்து, சருமத்திற்கு தேவையான புரதச்சத்துக்கள் மற்றும் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்க பெறாமல் தடுத்திடுகிறது. இது உங்கள் உடலில் கொலாஜன் உருவாகும் விகிதத்தையும் குறைக்கிறது. மீண்டும் மீண்டும் புகைப்பிடிக்க தொடர்ச்சியாக உதடுகளை குவிப்பதன் மூலம் இது வாயைச் சுற்றி கூடுதல் கோடுகளை ஏற்படுத்திடும். மேலும் இது உங்கள் சருமத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் வளர வாய்ப்பினை வழங்கிடுகிறது.
சுருக்கங்களை தடுக்கும் முறை:
தொடர் முக பாவனைகளை தவிர்த்திடவும்
வெளியே வெயிலில் செல்லும் போது, ஒரே மாதிரியான முக பாவனைகளை அடிக்கடி தொடர்ந்து செய்யும் போது சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இவற்றை செய்வதன் மூலம் முகத்தில் ஆங்காங்கே சுருக்கங்கள் தோன்றலாம். எனவே, வெயிலில் சுற்றும் வேலை அதிகமாக இருந்தால், சன் கிளாஸஸ் போட்டு செல்லலாம். அதன் மூலம் கண்களின் ஓரங்களில் உண்டாகும் சுருக்கத்தை தடுத்திடலாமே தவிற முற்றிலுமாக விரட்டிட முடியாது. மேலும், புறஊதாக்கதிர்களிடம் இருந்தும் இது காப்பாற்றிடும்.
நல்ல தூக்கம் தேவை
ஒரு மனிதனுக்கு சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே போன்று, தூக்கமும் அத்தியாவசியமான ஒன்று. சரியான தூக்கம் இல்லையென்றால் கூட ஒருவருக்கு முகத்தில் சுருக்கம் ஏற்படக்கூடும். குறைவான தூக்கமானது ஒருவரது உடலில் மனஅழுத்தத்திற்கான ஹார்மோனை சுரக்க செய்திடும். நல்ல தூக்கம் இல்லையென்றால், அது வயிற்றின் ஒரு பக்கத்தில் தூங்குவது, முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்களை வர செய்துவிடும்.
சரும பராமரிப்பு
உங்களுக்கு அதிக வியர்வை ஏற்படுவது இயல்பாயின், முகத்தை அடிக்கடி கழுவ மறந்திடாதீர். அதுவும் மெதுவாக கழுவ வேண்டும். அதிக வலிமை கொடுத்து வேகமாக தேய்த்து கழுவினால், தோல் உரிதல் அல்லது எரிச்சல் ஏற்படக்கூடும். மென்மையான ஆல்கஹால் இல்லாத க்ளென்சர் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. நாளொன்றிற்கு 2 முறை மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். வெயிலில் அடிக்கடி செல்லும் பணி இருந்தால், தொப்பி மற்றும் சன் கிளாஸஸ் போட்டு கொள்ளவும். மேலும், SPF 30 அல்லது அதற்கு அதிகமாக உள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.