22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

images (20)ஆல்கஹாலை குடித்தால் தான் உடலுக்கு பிரச்சனைகள் வருமே தவிர, அதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமம் நன்கு ஜொலிக்கும். மேலும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் நிறைய ஆல்கஹால்கள் பயன்படுகின்றன.

தற்போது விஸ்கி ஃபேஷியல் பெண்களிடையே பிரபலமான ஒன்றாக உள்ளது. இத்தகைய விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதற்கு, அழகு நிலையங்களில் நிறைய செலவாகும். ஆனால் அந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.

ஆமாம், இந்த விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

•  1 டீஸ்பூன் விஸ்கியை, 3 மிலி தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் முகத்தை மசாஜ் செய்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், சருமத்தில் பொலிவு அதிகரிப்பதோடு, சருமம் இறுக்கமடையும்.

• எலுமிச்சை பழ சாறுடன் விஸ்கி சேர்த்து மாஸ்க் போட்டால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தவிர்க்கலாம். அதற்கு விஸ்கியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

• தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சுரைசர். எனவே 2 டீஸ்பூன் விஸ்கியை தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தள்ளிப் போவதோடு, சரும வறட்சியும் நீங்கும்.

• சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை போக்க முட்டை ஒரு சிறந்த பொருள். எனவே இத்தகைய முட்டை நன்கு அடித்து, அதில் சிறிது விஸ்கி, எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சரும சுருக்கங்கள் மறையும்.

Related posts

உங்க முகத்தின் அழகை கெடுக்கும் மங்கை போக்க எளிய நாட்டு மருத்துவம்!முயன்று பாருங்கள்

nathan

மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

பாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஜெய் சங்கர் மகன்!

nathan

குளிர் காலத்தில் முகத்தை பராமரிக்க பழங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்!…

sangika

சரும அலர்ஜியை போக்க வழிகள்

nathan

மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

nathan

மூக்கைச் சுற்றியிருக்கும் வெள்ளைப்புள்ளிகளை நீக்க சில டிப்ஸ்…!

nathan

ஆண்களே நீங்க எப்பவுமே இளமையா இருக்கணுமா? இதப் படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா அஜித் மீது ரசிகர்கள் அதிக அன்பு வைக்க காரணம் இந்த 5 விஷயம் தான்.!

nathan