23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
​பொதுவானவை

மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச்

 

மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச் தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்
முட்டை – 1
தேன் – 2 ஸ்பூன்
ஏலக்காய், பட்டை தூள் – ஒரு சிட்டிகை
மாம்பழம் – 1
வெண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

• மாம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, தேன், ஏலக்காய், பட்டை தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

• முட்டை சேர்க்க விரும்பாதவர்கள், 1 ஸ்பூன் கார்ன்ஃப்லார் (அ) கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யலாம்.

•  தோசை கல்லில் வெண்ணெய் போட்டு ரொட்டி துண்டுகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து, தோசைக்கல்லில் இரு புறமும் மிதமான சூட்டில் டோஸ்ட் செய்யவும்.

• டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளில் நடுவில் நறுக்கிய மாம்பழ துண்டுகளை வைத்து பரிமாறவும்.

• உங்களுக்கு பிடித்த எந்த பழங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Related posts

காதலுக்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள்

nathan

கறிவேப்பிலை தொக்கு

nathan

வெந்தயக் கீரை ரசம்

nathan

பைனாபிள் ரசம்

nathan

இஞ்சி தயிர் பச்சடி

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

nathan

கிராமத்து கருவாட்டு தொக்கு

nathan

tamil name | தமிழ் பெயர்

nathan