28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
Other News

உதடுகளில் உள்ள கருவளையத்தை போக்க சிம்பிளான பாட்டி வைத்திய குறிப்புகள்!

உதடுகளில் இருக்கும் கருவளையங்கள் உங்கள் அழகையே கெடுத்து விடும். முக்கியமாக உதடுகள் பொலிவை இழந்து சோர்வாக இருக்கும். இந்த பிரச்சனை பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கின்றது. உதடுகளில் கருமை நிறம் வரக் காரணம், அதிகமான நிறமிகள் (ஹைபர் பிக்மன்டேஷன்), அழுக்குகள், நச்சுப் பொருட்கள், த்ரட்டனிங், வேக்சிங் போன்றவற்றால் தான் இவை ஏற்படுகிறது. இதற்காக நீங்கள் அழகு நிலையங்களுக்கு சென்றாலும், அவை தற்காலிகமான தீர்வை மட்டுமே உங்களுக்கு தரும். எனவே இதற்கான இயற்கை தீர்வை இங்கு காண்போம்.

எலுமிச்சை சாறு:

உதடுகளில் இருக்கும் கருமை நிறத்தை நீக்க, எலுமிச்சை சாறு முக்கிய பங்காற்றுகிறது.
இதில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் உதடுகளில் உள்ள கருப்பு நிறத்தை நீக்கி, சாதாரண உதடு நிறத்திற்கு மாற்றிவிடும்.
உருளைக்கிழங்கு:maxres

உருளைக்கிழங்கு சிறந்த இயற்கையான ப்ளீச்சிங் -ஆக செயல்படுகிறது. வேக வைக்காத உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு உதடுகளில் நறுக்கிய உருளைக்கிழங்கை தடவி விடலாம். 5 நிமிடம் வரை உதடுகளை மசாஜ் செய்யுங்கள். பின்பு மீண்டும் ஒருமுறை இந்தக் கலவையை உதடுகளில் தடவி அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
பின்பு குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு மூன்றுமுறை செய்து வந்தால், உதடுகளில் உள்ள கருமை நிறம் மறைந்து, உதடுகள் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும்.
ரோஸ் வாட்டர்:

2 தேக்கரண்டி லெமன் ஜூஸ், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்ந்து கலக்கிக் கொள்ளுங்கள். பின்பு இந்த நீரை உதடுகளில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.
பின்பு மற்றுமொரு முறை இந்தக் கலவையை உதடுகளில் தடவி கால் மணி நேரம் ஊற வையுங்கள். இந்த முறையை வாரத்திற்கு 5 முதல் 7 முறை வரை செய்து வரலாம்.
இதை தொடர்ந்து செய்து வந்தால் உதடுகளில் இருக்கும் கருமை நிறம் மறைந்து, ரோஸ் நிறத்தில் மாறி விடும்.

Related posts

விசாரணை வட்டத்தில் விக்ரமன்! பெண் வழக்கறிஞர் பாலியல் புகார் எதிரோலி…

nathan

உங்களுக்கு தெரியுமா நீங்கள் இறந்தபின் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் டேட்டா என்ன ஆகும் தெரியுமா?

nathan

நடிகர் ஜெயராம் வீட்டில் களை கட்டும் திருமண கொண்டாட்டங்கள்.!

nathan

இதை நீங்களே பாருங்க.! சுடிதார் அணிந்து வந்த சொர்கமே, சாக்ஷி அகர்வால் Latest Glamour புகைப்படம் !

nathan

அடுத்தடுத்து 4 பேரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்..

nathan

விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமராக வந்த ஜான்வி கபூர்!

nathan

கோடீஸ்வர யோகம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

nathan

600 உணவுகளை தயாரித்த இந்தியாவின் முதல் இயந்திர சமையல் மனிதர்!

nathan

காவாலா பாட்டுக்கு வந்த சோதனையா இது?

nathan