25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

உருளைக்கிழங்கு பொரியல்

03-potato-fryஎன்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
உளுந்து – 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/4 தேக்கரண்டி
உப்பு எண்ணெய் – 1 சின்ன குழிக்கரண்டி
கொத்தமல்லி, கருவேப்பிலை வெங்காயம் – 1 (நறுக்கியது)

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை நறுக்கி வைக்கவும் (தோல் நீக்க வேண்டியதில்லை) கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், உருளை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் சிவந்ததும், பொடி வகைகளை சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். உருளை வெந்ததும் மூடி இல்லாமல் சிறுந்தீயில் 5 நிமிடம் வைத்து கிளறவும். குறிப்பு: தாளித்த தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்றதுக்கு ஏற்றது. விரும்பினால் 4 துண்டு தக்காளி சேர்க்கலாம். காரம் சேர்ப்பவர்கள் இன்னும் சிரிது மிளகாய் தூள் சேர்க்கலாம்.

Related posts

இட்லி உப்புமா செய்வது எப்படி

nathan

கோதுமை ரவை கேரட் புட்டு

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்!….

sangika

மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா

nathan

பாதாம் சூரண்

nathan

ஸ்நாக்ஸ்: மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி

nathan

உருளைக்கிழங்கு பஜ்ஜி

nathan

சுவையான… கீமா மொமோஸ்

nathan

சத்தான பார்லி வெண் பொங்கல்

nathan