25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டும் மசாஜ்
தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும்.உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு மேல் விழுந்தால் வளராது. மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும்.

* தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

* ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி, தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்யவேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.

* மாங்கொட்டையில் உள்ள ஒட்டை எடுத்துவிட்டு, அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ‘மேங்கோ பட்டர்’ என்று பெயர். இந்த பட்டர் ஒரு டேபிள்ஸ்பூனுடன், வேப்பம்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.

* வெட்டிவேர் – 10 கிராம், சுருள் பட்டை – 100 கிராம், வெந்தயம் – 2 டீஸ்பூன், விளாம் மர இலை – 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.

Related posts

முடி உதிர்தல் பற்றிய கவலைகளை போக்கும் அற்புத எண்ணெய்கள்!

nathan

தலைக்கு நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!

nathan

கூந்தலில் நுரை வந்ததும், அழுக்கு நீங்கிவிட்டதாக எண்ணி முடியினை அலசி விடுகிறோம்

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உரோமத்திற்கு வளர்ச்சி.!!

nathan

கூந்தல் உதிர்வதைத் தடுக்கும் இயற்கை வழிகள்

nathan

இளநரையை தடுக்கும் புளி – கருமையாக வைத்துக்கொள்வது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan

பொடுகை நிரந்தரமாக போக்கும் சக்தி வாய்ந்த மூலிகை குறிப்புகள்!!இதை படிங்க…

nathan

இளநரையை போக்கும் மருதாணி:-சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மிளகாயை எண்ணெயில் கலந்து தேய்ச்சா முடி நீளமா வளருமாம்…

nathan