31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தலைமுடி ரொம்ப கொட்டுதா?இதோ எளிய நிவாரணம்

பொதுவாக அனைவருக்குமே தலைமுடி நீளமாக அடர்த்தியாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஒருநாளைக்கு 100க்கு மேல் முடி கொட்டினால் அதை உடனடியாக கவனித்தாக வேண்டும், பொடுகு தொல்லை மற்றும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததே முடி கொட்டுவதற்கு காரணமாக அமையலாம்.

செயற்கையான ஷாம்புகள் பயன்படுத்துவதை விடுத்து இயற்கையான முறையில் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதே சிறந்தது.

இந்த பதிவில், முடி உதிர்வை கட்டுப்படுத்தும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
மருதாணி – 10 கிராம்
செம்பருத்தி – 10 கிராம்
கறிவேப்பிலை – 10 கிராம்
ஆவாரம் பூ – 10 கிராம்
கரிசலாங்கண்ணி – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்
சோற்றுக் கற்றாழை – 50 கிராம்

செய்முறை
மருதாணி , செம்பருத்தி , கறிவேப்பிலை , ஆவாரம் பூ , கரிசலாங்கண்ணி , சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ளயும்.

பிறகு கடாயில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சிறிது சூடேறியதும் அரைத்து வைத்த மூலிகைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கயும்.

பிறகு வெட்டிவேர் சேர்த்து எண்ணெய் பொண்ணிறமாக மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து பிறகு வடிகட்டி 2 நாட்களுக்கு பிறகு பயன் படுத்தவும்.

இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நன்றாக வளரும், உடல் சூட்டை குறைப்பதுடன் கண் எரிச்சலுக்கு தீர்வாகும்.

Related posts

சீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும் தெரியுமா!!

nathan

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!

nathan

நரை முடியை வளரவிடாமல் செய்யும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்!!

nathan

பிசுபிசுப்பான கூந்தலுக்கான காரணமும் தீர்வுகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

nathan

பொடுகை நிரந்தரமாக போக்கும் சக்தி வாய்ந்த மூலிகை குறிப்புகள்!!இதை படிங்க…

nathan

பளபளப்பான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற சூப்பர் டிப்ஸ்

nathan

உங்க இளநரையை நிரந்தரமாக கருமையாக்க வழிகள் என்ன தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

nathan

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்

nathan