25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
9 cream 15
சரும பராமரிப்பு

உங்களுக்கு தொடை, பிட்டம், கை போன்ற பகுதிகளில் அசிங்கமாக கோடுகள் தெரிகிறதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

செல்லுலைட் என்பது உங்கள் இடுப்பு, பிட்டம் மற்றும் தொடைகளில் காணப்படும் கொழுப்புகள் தேங்குவதால் உண்டாகிறது. தேங்கியுள்ள கொழுப்புத் திசுக்கள் கீழ்நோக்கி இழுக்கப்படுவதால் இந்த நிலை உண்டாகிறது. இதனால் அந்த பகுதியில் தோல் தடிப்பு, கோடுகள் அல்லது கட்டிகள் உருவாகின்றன.

கிட்டத்தட்ட ஏறக்குறைய 90 சதவீத பெண்கள் இந்த செல்லுலைட் பிரச்சனையால் பாதிப்படைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தான் என்னவோ இதைப் பற்றி நிறைய கட்டுக்கதைகளும் மக்களிடையே வலம் வருகிறது. அதைப் பற்றி தான் இந்த பகுதியில் காணப் போகிறோம்.

கட்டுக்கதை 1: கார்டியோ உடற்பயிற்சி செல்லுலைட்டை போக்கும்.

பொதுவாக பெண்கள் மத்தியில் கார்டியோ உடற்பயிற்சி கொழுப்பை கரைக்க உதவுவதால் அது செல்லுலைட்டையும் போக்கும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் கார்டியோ உடற்பயிற்சி செல்லுலைட் வெளியே தெரிவதை வேண்டுமென்றால் குறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக முழுவதுமாக அதை போக்காது.

உண்மை 1: ஆண்களை விட பெண்களுக்கே செல்லுலைட் பிரச்சனை இருக்கிறது.

ஆண்களை விட பெண்கள் தொடை பகுதியில் அதிக கொழுப்பை கொண்டு இருப்பதால் அவர்களுக்கு செல்லுலைட் பிரச்சனை அதிகமாக வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் காணப்படும் இணைப்புத் திசுக்கள் கூட ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பலவீனமானதாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த செல்லுலைட் ஆண்களையும் பாதிக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 10 சதவீத ஆண்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர்.

9 cream 15

கட்டுக்கதை 2: நம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் செல்லுலைட்டை உண்டாக்குகின்றன.

கொழுப்பு தேக்கம் கொலாஜன் இழைகளின் அடுக்குகள் அல்லது இணைப்பு திசுக்கள் வழியாக சருமத்தை கீழ் தள்ளத் தொடங்கும் போது செல்லுலைட் ஏற்படுகிறது. எனவே உடலில் உள்ள நச்சுக்கள் செல்லுலைட்டை உருவாக்குகின்றன என்பது உண்மையானது கிடையாது. உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான கொழுப்பு, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவே இணைப்பு திசுக்கள் பலவீனமடைகின்றன. இதனாலே செல்லுலைட் உருவாகிறது.

உண்மை: செல்லுலைட் வயதிற்கு ஏற்ப மோசமடையும்.

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் செல்லுலைட் ஏற்பட வழிவகுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு வயதாகும் போது ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைகிறது. மோசமான இரத்த ஓட்ட சுழற்சி, கொலாஜன் உற்பத்தியில் குறைவு மற்றும் பழைய இணைப்பு திசுக்களின் முறிவும் இதற்கு காரணமாக அமைகின்றன.

கட்டுக்கதை 3: உடல் பருமனான நபர்களுக்கு தான் செல்லுலைட் பாதிப்பு ஏற்படும்.

அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு கொழுப்பு தேக்கமும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த கொழுப்பால் இணைப்புத் திசுக்களில் அழுத்தம் உண்டாகும். ஆனால் செல்லுலைட் உடல் பருமனாகிறவர்களை மட்டும் பாதிப்பதில்லை. எல்லா வடிவில் எடையில் உள்ள பெண்களையும் இது பாதிக்கிறது.

உண்மை: லேசர் சிகிச்சைகள் செல்லுலைட்டை சரிசெய்யும்.

வெலாஷேப் III மற்றும் பிற லேசர் சிகிச்சைகள் செல்லுலைட்டை சரி செய்ய உதவுகிறது. ஆனால் இது ஒரு குறுகிய கால பயனை மட்டுமே தரும். இந்த லேசர் சிகிச்சை கூட நிரந்தர தீர்வை தர வாய்ப்பில்லை.

கட்டுக்கதை 4: லிப்போஷக்சன் முறை பலனை தரும்.

லிப்போஷக்சன் செல்லுலைட்டை போக்க சிறந்த தீர்வாக இருக்காது. இந்த முறையில் நீங்கள் செல்லுலைட்டை போக்க நினைத்தால் அது சரும அடுக்குகளை மெல்லியதாக மாற்றுவதன் மூலம் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.7 liposuction

உண்மை: சில உணவுகள் செல்லுலைட்டை போக்க உதவுகிறது.

நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்கும் போது அது கொழுப்பை குறைக்கிறது. மேலும் உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைக்க முடியும். இணைப்புத் திசுக்களை வலுவாக வைக்கும் உணவுகளான முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் மிளகாய் போன்றவற்றை சேருங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனால் உங்க சருமம் நீர்ச்சத்துடன் ஈரப்பதத்துடன் இருக்கும். எனவே அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். குளிக்கும் போது நன்றாக தேய்த்து குளியுங்கள். இது உங்க உடம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவும். சருமம் புத்துணர்ச்சியுடன் செல்லுலைட் மறைய உதவும்.

கட்டுக்கதை 5: தோலை இறுக்கமாக்கும் க்ரீம்கள் செல்லுலைட்டை போக்கும்.

தோலை இறுக்கமாக்கும் க்ரீம்கள் செல்லுலைட்டை போக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

உண்மை: மரபணுக்கள் செல்லுலைட்டை பாதிக்கலாம்.

உண்மையில் மரபணு ரீதியாக செல்லுலைட் வர வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்தில் வேறு யாருக்காவது இந்த செல்லுலைட் பிரச்சனை இருந்தால் நீங்களும் இதில் பாதிப்படைவீர்கள்.

Related posts

பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan

வியர்வை துர்நாற்றமா? இந்த பழத்தை அக்குளில் தேய்த்தால் வியர்வை நாற்றமே வீசாது…!

nathan

சருமத்தை அழகாக்கும் கற்றாழை

nathan

பளபள சருமத்துக்கு பப்பாளி!

nathan

அழகான சருமம் வேண்டுமா? இந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

சருமத்திற்கு பொலிவு தரும் பீட்ரூட்

nathan

‘இந்த’ ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள முடிகளை அகற்றி சருமத்தை ஜொலிக்க வைக்குமாம்!

nathan