25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
vitiligo 1
மருத்துவ குறிப்பு

சருமத்தில் உள்ள வெண்படைக்கான சில எளிய கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

விட்டிலிகோ எனப்படும் வெண்படை ஒருவித தோல் சம்பந்தப்பட்ட வியாதியாகும். சருமத்தின் மீது ஏற்படும் நிறமாற்றம் தான் இது. உடலின் பல்வேறு பகுதிகளில் இது ஏற்படக்கூடும். உடலில் மெலனின் உற்பத்தி செய்யும் செல்களான மெலனோசைட்டுகளின் மோசமான செயல்பாட்டின் விளைவாகவே வெண்படை ஏற்படுகிறது.

உங்கள் சருமத்தின் நிறமிக்கு காரணமான செல் தான் மெலனின். வெண்படலத்தின் போது, மெலனோசைட்டுகள் அழிக்கப்படுகின்றன, மேலும் இது மெலனின் உற்பத்தியைத் தடுப்பதோடு, வாய், மூக்கு மற்றும் கண்களுக்குள் இருக்கும் சவ்வுகளையும் பாதிக்கும்.

வெண்படை ஏற்படுவதற்கான காரணங்கள்

வெண்படை ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகும். இதனால் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு பாதிப்படைந்து, உங்கள் சருமத்தில் மெலனோசைட்டுகளை ஒரு வெளிநாட்டு உடலாக தவறுதலாக எடுத்து அவற்றை தாக்குகிறது. மெலனோசைட்டுகளின் இந்த அழிவு மெலனின் உற்பத்தியை பாதிக்கிறது. இதனால் தோல் நிறமி குறைகிறது. எம்.டி. டி.வி.எல் டாக்டர் கே. ஹரிஷ்குமார் கூறுவதன் அடிப்படையில், வெண்படையும் ஒரு மரபணுவாக இருக்கலாம்.

வெண்படையின் சரியான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் சில சான்றுகள் அதிகப்படியான சூரிய ஒளியைக் குற்றம் சாட்டினாலும், மற்றவை அனைத்தும் வெண்படை ஏற்படுவது கடுமையான மனஉளைச்சலால் என கூறுகின்றன. இருப்பினும், இவற்றை எந்த மருத்துவ சமூகமும் இதுவரை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.vitiligo 1

வெண்படையின் அறிகுறிகள்

வெண்படையின் ஆரம்ப கால அறிகுறி என்பது சருமத்தின் மீது ஏற்படும் வெள்ளை திட்டுக்கள். இந்த திட்டுக்கள் உடலில் சூரிய ஒளி அதிகமாக படும் பகுதிகளில் உண்டாகும். அதாவது கைகள், பாதம், முகம், உதடு போன்ற பகுதிகளாக இருக்கலாம். இவை தவிர வெண்படை உண்டாகக்கூடிய பகுதிகள் என்றால், அக்குள், இடுப்பு, வாயைச் சுற்றி, மூக்கு, கண்களைச் சுற்றி, மலக்குடல் பகுதிகள் ஆகியவையாக கூட இருக்கலாம்.

வெண்படையின் மற்றொரு அறிகுறி என்றால், இளநரை. அதுமட்டுமல்லாமல் கருத்த நிறமுடையவர்களுக்கு வாயின் உள் பகுதிக்குள்ளும் வெண்படை ஏற்படக்கூடும்.

இந்த வெண்படையை சரி செய்யவே முடியாதா என கேட்டால், முடியும் என்றே சொல்லலாம். சில எளிய வீட்டு வைத்திய முறைகளை சரியான முறையில் தொடர்ந்து செய்து வந்தாலே சருமத்தில் உள்ள வெண்படை குறைவதை நிச்சயம் உணரலாம்.

வேம்பு எண்ணெய்

வேம்பு எண்ணெய், வெண்படையால் ஏற்பட்ட சருமத்தின் நிற மாற்றத்தை சரிசெய்யும். வேம்பில் உள்ள நோய் தடுப்பாற்றல் மாற்றி உடலில் உள்ள வெண்படலங்களை குறையச் செய்யும்.

பயன்படுத்தும் முறை :

2 முதல் 3 துளிகள் வேம்பு எண்ணெயை காட்டனில் நனைத்து வெண்படலங்களில் மீது தேய்க்கவும். 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். வெண்படலங்களின் மீது நிற மாற்றம் தெரியும் வரை இதனை தினமும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின், வெண்படையை சரிசெய்ய உதவும் ஒரு முக்கிய ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். இதனால் வெண்படையை சரி செய்ய முடியும்.

பயன்படுத்தும் முறை :

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை, ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கலவையை வெண்படை உள்ள பகுதிகளில் தடவி 30 நிமிடங்களில் கழித்து கழுவி விடவும். இது போன்று வாரத்திற்கு 3 முதல் 4 முறை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.4 neemoil 1575

இஞ்சி சாறு மற்றும் சிவப்பு களிமண்

இஞ்சியில் பைத்தோகெமிக்கல் அதிகமாக உள்ளதால் சருமத்தில் ஏற்படக்கூடிய நிறமாற்றத்திற்கு ஒரு நல்ல தீர்வினை இது வழங்கும். இந்த இஞ்சி சாறை, சிவப்பு களிமண் உடன் கலந்து உடலில் பூசும் போது, சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இரத்த கூட்டத்தை அதிகரிக்க செய்வதால் எந்த பிரச்னையும் சரியாகிவிடும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்றை, ஒரு டீஸ்பூன் சிவப்பு களிமண்ணுடன் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளவும். அதனை, வெண்படை உள்ள இடங்களில் பற்று போட்டு 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை இதனை தொடர்ந்து செய்து வரவும்.

முள்ளங்கி விதைகள் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர்

முள்ளங்கி விதைகளை பேஸ்ட்டாக செய்து உபயோகிப்பதால், வெண்படை அறிகுறிகளை விரட்டிடலாம். முள்ளங்கி விதை மற்றும் வினிகரில் உள்ள நோய் எதிர்ப்பாற்றால் எனும் பயோஆக்டிவ், சரும நிறமாற்றம் மற்றும் படலங்கள் ஏற்படுவதை குறைத்திடும்.

பயன்படுத்தும் முறை :

ஒரு டேபிள் ஸ்பூன் முள்ளங்கி விதையை பொடியாக செய்து கொண்டு, அதனுடன் 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இந்த கலவையை வெண்படைகளின் மீது பற்று போட்டு, 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். வாரத்திற்கு 3 முறையாவது இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

மாதுளை இலைகள்

நோய் எதிர்ப்பாற்றல் பண்பான பயோஆக்டிவ் மாதுளை இலைகளில் அதிகமாக காணப்படுகிறது. இதனால், வெண்படை பாதிப்பை குறைத்திடலாம். சரும மாற்ற பிரச்னைகளுக்கு இது நல்லதொரு தீர்வினை வழங்கிடும்.

பயன்படுத்தும் முறை :

மாதுளை இலைகள் எடுத்து, அவற்றை வெயில் நன்கு காய வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் காலை 8 கிராம் அளவிற்கு நீரில் கலந்து குடித்து வரவும்.

Related posts

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்……..

nathan

காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் – அதிர்ச்சி!!!

nathan

வாய் துர்நாற்றம் தாங்க முடியலையா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாம்…

nathan

லவங்கபட்டையின் மருத்துவ பயன்கள்! மூலிகை மந்திரம்!!

nathan

கழுத்துவலி மூட்டுவலி தீர இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வாருங்கள்…..

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப கால நீரிழிவிலிருந்து தப்புவது எப்படி?

nathan

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எவ்வித அறிகுறியுமின்றி இருக்கும் கர்ப்பப்பை கட்டிகள்

nathan