33.3 C
Chennai
Saturday, May 18, 2024
5 handgerms 15

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே ஈஸியா சானிடைசர் செய்யலாம் தெரியுமா?

சுத்தம் சோறு போடும் என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; நிதர்சனமான உண்மையும் கூட. இன்றைய சூழ்நிலையில் சுத்தம் மட்டுமே ஒருவரை நோய் தாக்குதலில் இருந்து காக்கக்கூடியது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய COVID-19 எனும் நோய் தாக்காமல் இருப்பதற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தான் நாம் வீட்டிலேயே முடங்கி கிடந்தாலும் சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வீட்டில் யாரேனும் ஒருவராவது வெளியே சென்று தான் ஆக வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் வெளியே செல்லும் நபர் தனது கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கொரோனா பிரச்சனை தொடங்கிய சில நாட்களிலேயே பெரும்பாலான கடைகளில் சானிடைசர் எனும் சுத்திகரிப்பான் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிட்டன. 70 சதவிகித ஆல்கஹால் கொண்ட சுத்திகரிப்பான் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியது.

இருப்பினும், சானிடைசர் கிடைக்காத பட்சத்தில் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது என்றெல்லாம் இல்லை. சோப்பை கொண்டு கூட கைகளை தாராளமாக சுத்தம் செய்யலாம். ஆனால், செல்லும் இடங்களுக்கெல்லாம் சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு செல்ல முடியாது என்பதால் தான் சானிடைசரை பயன்படுத்துகிறோம். அதிலும் ஆல்கஹாலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் அனைவரது சருமத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். அதுவே, ஆல்கஹால் இல்லாத சானிடைசர் பயன்படுத்தலாம் என்று பார்த்தால் கூட, அதுவோ மிகவும் குறைவான எண்ணிக்கையிலே கிடைக்கக் கூடியது.

அதற்காக தான் இப்போது சுலபமான வழி ஒன்றை சொல்ல போகிறோம். விலை அதிகமான சானிடைசரை கடையில் வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்தால் எப்படி இருக்கும். வீட்டில் எப்படி சானிடைசரை எல்லாம் செய்ய முடியும் என்று கேட்க வேண்டாம். வீட்டிலேயே இயற்கை சானிடைசரை சுலபமான முறையில் செய்திடலாம். அதுவும், வெறும் மூன்றே பொருட்களை கொண்டு செய்திடலாம். சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து வறண்டு விடாமல் தடுத்திட உதவும்.5 handgerms 15

சானிடைசர் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜெல்

* விட்ச் ஹாசில் எக்ஸ்ட்ராக்ட்(Witch hazel extracts)

* அத்தியாவசிய எண்ணெய்கள் (மிளகு, டீ-ட்ரீ, கிராம்பு மற்றும் வேம்பு போன்றவை)

* சிறிய ஸ்ப்ரே பாட்டில்

செய்முறை:

* ஒரு சுத்தமான பௌல் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.

* அதில், 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும்.

* அத்துடன், விட்ச் ஹாசில் எக்ஸ்ட்ராக்ட் சில துளிகள் மற்றும் சில துளிகள் உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஆன்டி-பாக்டீரியல் பண்பு கொண்ட மிதமான இயற்கை ஆயிலை தேர்ந்தெடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது. வேண்டுமென்றால், வாசனை திரவியம் ஏதாவது சிறிது சேர்த்துக் கொள்ளலாம். அது சானிடைசருக்கு நல்ல நறுமணத்தைக் கொடுக்கும்.

*மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயாரித்த கலவை ஸ்ப்ரே பாட்டில் அல்லது உங்களுக்கு விருப்பமான ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

* தேவைப்பட்டால், தயாரித்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். ஸ்ப்ரே பாட்டில் உபயோகிப்பவர் என்றால் நீர் சேர்த்தால் தான் சரியான பதம் கிடைக்கும்.

* வேண்டுமென்றால், வைட்டமின் ஈ சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மேலும் பெருக்கி கொள்ளலாம்.

* இயற்கை பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் ரசாயனம் எதுவும் சேர்க்காததால் இது நீண்ட நாட்கள் அப்படியே இருக்காது.

சானிடைசரை சரியாக உபயோகிக்கும் முறை:

சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே, சானிடைசர் உபயோகிப்பதற்கான பலன் கிடைக்கும். கையை சுத்தம் செய்ய, சில துளிகள் சானிடைசரை உள்ளங்கையில் ஊற்றி நன்கு தேய்க்கவும். சில நிமிடங்களில் கை உலர்ந்து விடும். நீர் கொண்டு கையை கழுவ வேண்டிய தேவையில்லை.4 handsanitizer

வீட்டிலேயே செய்த சானிடைசரால் கிடைக்கும் பயன்கள்:

#1

முற்றிலும் இயற்கை முறையிலானது. இந்த சானிடைசரை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத மூலிகைகளால் ஆனது.

#2

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வீட்டிலேயே செய்த இந்த சானிடைசரை உபயோகிப்பதன் மூலம் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை சுலபமாக அழித்திடலாம். அதுமட்டுமல்லாது, பருவநிலை மாற்றங்களால் காற்றின் மூலம் பரவக்கூடிய கிருமிகளால் ஏற்படக்கூடிய உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்த்திடவும் உதவக்கூடியது.

#3

தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும். இதிலுள்ள பொருட்களில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்பு அனைத்து வகையான தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அழித்திடக்கூடியது.

#4

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். கற்றாழையில் ஈரப்பதத்தை அளிக்கக்கூடிய பொருட்கள் அதிகமாக இருப்பதால், அது வறட்சியில் இருக்கும் சருமத்தை காப்பாற்றக்கூடியது.