27.5 C
Chennai
Friday, May 17, 2024
9640394

தெரிந்துகொள்வோமா? முத்தம் குறித்து அறிந்திடாத முக்கிய விஷயங்கள் என்னென்ன !

முத்தம்.. முத்தம் என்று கூறினாலே மனதிற்குள் சொல்ல முடியாத ஓர் உற்சாகம்.. தங்களின் அன்பை வெளிப்படுத்த மனிதன் கையாளும் ஓர் அற்புதமான இயற்கை பாச பரிமாற்ற நிகழ்வுதான் முத்தம்.

நமது உறவுகளை பொறுத்த வரையில் நாம் முத்தம் வைக்கும் நபரின் மீது அன்பும்., பாசமும்., ஏக்கமும்., பரிவும்., காதலும்., காமமும் என பல விதமான உணர்வுகள் இருக்கும். யாருக்கு? என்பதை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக திருமணம் முடிந்த அல்லது காதல் தம்பதிகள் முத்தம் கொடுப்பது வழக்கம்.

இவ்வாறான தம்பதிகளை பொறுத்த வரையில் சூழ்நிலையை பொறுத்து கன்னத்தில் முத்தம்., நெற்றியில் முத்தம்., உதட்டில் முத்தம் என்று முத்தத்தின் வகை இடத்திற்கு தகுந்தாற் போல மாறுபடும். முத்தத்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

அந்த வகையில் இன்று நாம் முத்தம் குறித்த அறியாத விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். நாம் முத்தம் கொடுக்கும் போது இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுப்பதால் பற்சிதைவு பிரச்சனை தடுக்கப்படுகிறது.

நமது மன அழுத்தம் வெகுவாக குறைந்து நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும்., முத்தங்கள் குறித்த அறிவியல் படிப்பிற்கு Philematology என்று பெயர். மேலும்., முத்தம் கொடுக்கும் போது முகத்தில் இருக்கும் 32 தசைகளும் வேலை செய்வதால் முகச்சுருக்கம் போன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.