25 C
Chennai
Wednesday, Dec 25, 2024
மருத்துவ குறிப்பு

உருளைக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

 

உருளைக் கிழங்கின் மருத்துவப் பயன்கள் உருளைக் கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும்.  உருளைக் கிழங்கின் இலை இசிவு நோயை அகற்றக் கூடியது. மலத்தை இளக்கக் கூடியது, சிறந்த சிறுநீர்ப் பெருக்கி, சிறந்த நரம்பு வெப்பு அகற்றி உருளைக் கிழங்கை உணவாகக் கொள்வதால் உடல் நலம் பேணிக்காக்கப்படுகிறது.

உருளைக் கிழங்கால் உடல் எடை குறைகிறது. சர்க்கரை நோய்க்கும் துணை மருந்தாகின்றது. வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களைப் போக்கக் கூடியது. மலச்சிக்கலை மறையச் செய்வது. வெளிப்பூச்சாகவோ மேல்பற்றாகவோ பயன்படுத்துவதால் தீக்காயங்கள், நீர்க் கொப்புளங்கள், கணுக்கால்களில் உண்டான ஆறாத புண்கள், பாத வெடிப்புகள் ஆகியன குணமாகும்.

உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு இதம் தந்து மலச்சிக்கலை மறையச் செய்யும் நார்ச்சத்து போன்ற செயலை உடையது. இது மலத்தை உறையச் செய்கிறது. மலத்தை வெளித்தள்ள உதவுவதால் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்க்கு தடை போடுகிறது. ரத்தத்தில் சேறும் கொழுப்புச் சத்தை “டிரைகிளிசனாட்ஸ்” என்னும் இதய ரத்த நாளங்களுக்கு ஊறு செய்யும் கொழுப்புச்சத்து சேர்வது தவிர்க்கப்பெறுகிறது.

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

* பச்சை உருளைக் கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் போடுவதால் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனிவெடிப்பு, பாத குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ்த்தோன்றும் வீக்கங்கள் ஆகியன குணமாகும்.

* பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி உடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வருவதால் முகம் பளபளப்படையும் முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும்.

* பச்சை உருளைக் இரு துண்டுகளாக குறுக்கே வெட்டி அதன் சதைப் பகுதியை நெற்றிப் பொட்டுகளின் இருபுறமும் சற்று மென்மையாக அழுத்தித் தேய்ப்பதால் தலைவலி குணமாகும். குறிப்பாக மன உளைச்சலால் வருகின்ற தலைவலி தணியும்.

* உருளைக் கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து இரண்டு கண்களின் மேலேயும் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணமற் போகும்.

* பாலுள்ள, பிசுபிசுப்பான காய்கறிகளைக் கையாள்வதாலோ வேறு ஏதேனும் காரணங்களால் கைகளில் பிசுபிசுப்பு ஏற்பட்ட நிலையில் உருளைக் கிழங்கு பசையை கைகளில் இட்டுத் தேய்த்துக் கழுவ பிசுபிசுப்புத் தன்மை பறந்து போகும்.

* பழமையான நீண்டநாட்களாகப் பயன்படுத்தாத காலணிகளின் மீது பச்சை உருளைக் கிழங்கை வெட்டி காலணிகளின் மீது சிறிது நேரம் தேய்த்து வைத்திருந்து பின் வழக்கம் போல பாலிஷ்போட புதியன போல பொலிவு பெறும்.

* வெள்ளிப் பாத்திரங்கள் கறுத்துப்போவது என்பது இயற்கை. உருளைக்கிழங்கை நீரில் இட்டு கொதிக்க வைத்து எடுத்த நீரை ஆற வைத்து கறுத்த வெள்ளிப் பொருட்களை ஒருமணி நேரம் அந்த நீரில் ஊற வைத்து எடுக்க பளபளப்பாக விளங்கும்.

* வயிற்றில் சுரக்கும் அமிலம் இரவு நேரத்தில் நம் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியதாக இருக்கும். வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்பிசம் உடையவர்கள் நன்கு வேகவைத்து மசித்து ஒரு உருளைக் கிழங்கைச் சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச்சுரப்பு மட்டுப்பட்டு தூக்கம் அமைதியான உணர்வு உண்டாகும்.

* உருளையில் மிகுந்துள்ள சத்துக்களோடு “டேனின்ஸ்”, ஃப்ளேவனாய்ட்ஸ்”, மற்றும் “ஆல்கலாய்ட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன. இவற்றில் “டேனின்ஸ்” என்னும் சத்துப் பொருள் வற்ற வைக்கும் தன்மை உடையது. இதனால் வயிற்றுப் போக்கு தவிர்க்கப்படுவதோடு குணப்படுத்தவும் இயலுகிறது.

* சமீபகால ஆய்வுகள் மூலம் பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை பருகுவதன் மூலமும் உருளைக் கிழங்கினை வேகவைத்த நீரைப் பருகுவதன் மூலமும் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. உருளைக் கிழங்கு சாறு, உருளைக் கிழங்கு வேக வைத்த நீர் பருகுவதால் அதில் பொதிந்திருக்கும் பொட்டாசியம், “சல்பர்”, “பாஸ்பரஸ்”, குளோரைட் ஆகியனவும் “விட்டமின் சி” சத்தும் “என்ஸைம்கள்” என்னும் வேதிப் பொருள்களும் தோலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மிக்க பொலிவையும் பளபளப்பையும் உண்டாக்குகிறது. மேல்பூச்சாக பூசுவதால் தோலின் இறந்த திசுக்களை அகற்றி விட்டு புதிய திசுக்களை வளரச் செய்யும் உரமாகிறது. பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவையும் காணாமல் போகின்றன.

* உருளைக்கிழக்கு சாறு பருகுவதனாலும் மேல் பற்றாகப் போடுவதனாலும் கண்களின் கீழே நீர் கோர்த்துக் கொண்டு நீர்ப்பை போல தோன்றுகின்ற வீக்கம் வற்றிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் ஏற்படும்.

* உருளைக்கிழங்கு சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நீண்ட நாட்பட்ட மலச்சிக்கல் குடலில் நச்சுக்கள் பெருகி அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம் டினல் டோக்ஸிமியா தவிர்க்கப்படுகிறது. பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு இதுபோன்ற ரத்த அழுத்தம் ஏற்படுவது இயற்கையாகும். மேலும் மூட்டுக்களில் வாத நீர் தேங்கி வீக்கமும், வலியும் உண்டாக்குகின்ற “கவுட்” என்னும் நோய், சிறுநீரகக்கற்கள், மற்றும் நீரேற்றம் ஆகியனவும் பல மாதங்கள் தொடர்ந்து உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் குணமாகிறது என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

* உருளைக்கிழங்கு “ஸ்கர்வி” என்னும் ரத்தப் போக்கை உண்டாக்கும் நோய்க்கு மிகச்சிறந்த தீர்வு ஆகும். “ஸ்கர்வி” என்னும் நோய் விட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படும் ஓர் நோய் ஆகும். இதனால் ஈறுகளினின்று எளிதில் ரத்தம் வெளியேறுதல் அல்லது எங்கேனும் அடிபட்ட போது அதிக ரத்தப்போக்கு ஆகியன உண்டாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் “ஸ்கர்வி” நோய்க்கு உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு அரைத்து பசையாக உள்ளுக்குப் கொடுப்பது ஓர் நல்ல தீர்வாகும். புளிக்காய் உண்பது “ஸ்கர்வி” நோய்க்கு மிகவும் சிறந்தது என்று ஏற்கனவே நாம் பார்த்ததை இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

* அரை கப் உருளைக்கிழங்கு சாறு இரண்டு அல்லது மூன்று வேளை ஒரு நாளைக்கு என உணவுக்கு முன் எடுப்பதால் வயிறு மற்றும் இரையறைக் கோளாறுகள் விலகிப் போகின்றது. வாயு, அமிலம், வயிற்றுப்புண்கள் குணமாகிறது.

* உருளைக் கிழங்கு தோலைக் கொண்டு தீநீர் செய்து சாப்பிடுவதால் பித்தப்பை சம்பந்தமான தொல்லைகள் போக்கி ஈரலை பலப்படுத்தி உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

* உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பருமனாகிவிடுவோம் என்பது தவறு குறைவான அளவு எண்ணெய் சேர்த்தால் ஒன்றும் குற்றம் வராது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

Related posts

மனித உறவுகள் சீராக இருக்க….. A to Z

nathan

செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்

nathan

உடல்நல பிரச்சனைகளுக்கான இயற்கை மருத்துவ குறுப்புகள்…

nathan

சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி…?

nathan

இதயத்துடிப்பு கடுமையாக உயர்ந்தால்…. உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!அப்ப இத படிங்க!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! சிறுநீரக நோய்களை தீர்க்கும் சூப்

nathan

திருமணத்திற்கு தயாரா?அப்ப உடனே இத படிங்க…

nathan

குழந்தை பெற்றெடுத்த ஆண்…பிரிட்டனில் பரபரப்பு!

nathan