33.3 C
Chennai
Saturday, May 18, 2024
1316159022851210fccb5c95a63a9b0d31b3ef2fd3f13d2803b2f12349ade15d7e1cec2a4

ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்… எப்படி தளர்த்தப்படும் தெரியுமா?

நிதி ஆயோக் குழுவினர் ‘அவசரகால மருத்துவ மேலாண்மை திட்டம்’ ஒன்றை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளனர். அதன்படி கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், மாவட்டங்களில் தொடர்ந்து 28 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும். மற்ற பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு நான்கு படிநிலைகள் உள்ளன. முதலாவதாக கடைசி 7 நாட்களில் 5 பேருக்கு குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பும், புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாமலும் இருக்க வேண்டும்.

இரண்டவதாக, கடைசி 7 நாட்களில் 20 பேருக்கு குறைவான எண்ணிக்கையில் வைரஸ் பாதிப்பும், புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமலும் இருக்க வேண்டும்.