33.3 C
Chennai
Saturday, May 18, 2024
salary new

வச்சான் பாரு ஆப்பு! பிரபலங்களின் கோடி சம்பளங்களுக்கு முடிந்தது சோலி.. கொஞ்சநஞ்சமா ஆடுனீங்க

கோடி கோடியாய் தொழில் முதலீட்டில் முதன்மை பெற்றிருக்கும் சினிமாத்துறை தற்போது முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இதனால் 1000 கோடிகள் இழப்பு ஏற்பட்டு வருவதாக சினிமா துறையினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 50 முதல் 80 கோடி வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹீரோக்கள் தற்போது வரை கொரோனா வைரஸின் தாக்கத்தில் மக்களுக்காக உதவும் எண்ணம் இல்லாமல் தாங்கள் பெற்ற கோடிகளை தலைமாட்டில் வைத்து படுத்து உறங்குகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் வரிகளைக் கூட தயாரிப்பாளர்கள் கட்டவேண்டும் என்ற கட்டளையிட்டு சம்பளம் பெறும் முன்னணி ஹீரோக்களுக்கு இந்த கொரோனா வைரஸ் மூலம் பாடத்தை கற்பிக்க உள்ளனர் தயாரிப்பாளர்கள் சங்கம்.

அதாவது இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் பெப்ஸி ஊழியர்களுக்கு ஒவ்வொருவரும் 10 லட்சம் வரை கொடுத்து உதவியுள்ளனர். சிவகார்த்திகேயன் மட்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 25 லட்சம் கொடுத்துள்ளார். நடிகைகள் யாரும் உதவவில்லை என்ற சலசலப்பு இருந்து கொண்டே வந்தது, ஆனால் நயன்தாரா இதனை முறியடிக்கும் விதமாக 20 லட்ச ரூபாய் நிதியாக கொடுத்துள்ளார்.

உதவிய கரங்கள் ஒருபுறமிருக்க தமிழ் சினிமாவில் கோடிகளை குவிக்கும் ஹீரோக்கள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அவர்களின் சம்பளத்தில் இருந்து 30% குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது மற்ற மாநிலங்களில் முன்னணி ஹீரோக்கள் அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசுக்கான நிதிகளை கோடிக்கணக்கில் வழங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்து விட்டனர். ஆனால் தமிழகத்தில் மக்களின் டிக்கெட் மூலம் பல கோடிகளை சம்பாதித்து தனக்கென்று சொத்துக்களையும் பணத்தை மட்டும் சேர்த்து வைக்கும் நடிகர்களுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக இந்த சம்பள குறைப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் சினிமாத்துறையில் கடன் வாங்கி படங்களை எடுக்கும் முதலீட்டாளர்கள் நிறைய பேர் உள்ளனர். இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு வட்டி வாங்கக்கூடாது என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். தற்போது உள்ள நிலை மாறி இயல்பான சூழ்நிலைக்கு திரும்பிய பின் சின்ன படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதற்குப் பின் பெரிய ஹீரோக்களுடன் படங்கள் வெளிவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பள குறைப்பில் முன்னணி இயக்குனர்கள் மட்டும் இசையமைப்பாளர்களும் உண்டாம். அட்லி, முருகதாஸ், ஷங்கர்,ஏ ஆர் ரகுமான், அனிருத் இவர்களையும் இந்த சம்பள குறைப்பு விட்டுவைக்கவில்லை. வசூலில் மட்டும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் ஹீரோக்கள் நிதியை வாரி வழங்குவதிலும் இருக்க வேண்டும். ஆனால் துளிகூட அதைப் பற்றி யோசிக்காமல் இருக்கும் ஹீரோக்களுக்கு இது ஒரு சம்பட்டி அடி தான்.