23.9 C
Chennai
Thursday, Dec 26, 2024
அழகு குறிப்புகள்

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

 

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம் பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, சமைப்பது என, நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டி தான். அதுக்காக வேலை பார்க்காமல் இருக்க முடியுமா…? என்றால், முடியாது தான். ஆனால், உங்களின் உணவு முறையிலும், கைகளை பராமரிப்பதிலும் சற்று கவனம் செலுத்தினால்… உங்கள் உள்ளங்கையை மென்மையாக மாற்ற முடியும்.

உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்கடி கைகளில் வேசலின் தடவிக் கொள்ளலாம். உள்ளங்கை மற்றும் கையின் மேல் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறந்தால், தோலின் சுருக்கங்கள் நீங்கி தசைகள் விரியும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓர் எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும். ஓர் உருளைக்கிழங்கை வேகவைத்து, அதில் 5 சொட்டுகள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைக் கைகளுக்குப் பூசி, தேய்த்துக் கழுவுங்கள்.

ஆலிவ் எண்ணெய், தோலுக்கு நல்ல ஈரப்பத்தைக் கொடுக்கும். உருளை, கருமையை நீக்கிவிடும். வெடிப்புகள் தொடராமல் இருக்க… நிறைய தண்ணீர், பால், ஆரஞ்சு, ஆப்பிள் ஜுஸ் குடியுங்கள். காய்ச்சிய, வெது வெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.

Related posts

முகப்பருக்களை விரட்டும் ஆரஞ்சு

nathan

குட்டி… குட்டி… டிப்ஸ்… இதோ…! அழகுக்கு அழகு சேர்க்க…

nathan

என்றும் இளமையாக இருக்க சில சிறந்த உணவுகள்! நீங்கள் பின்பற்றுங்கள்…

nathan

இத படிங்க! சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா? – கவனத்தில்கொள்ள வேண்டியவை

nathan

ஃபேஷியல்

nathan

பெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்வது எப்படி?

nathan

முகம் வறண்டு இருந்தால் இந்த ஆயுர்வேத குறிப்புகளை பயன்படுத்தி அழகிய முகத்தை பெறுங்கள்…..

sangika

வெள்ளையாக்க நைட் டைம்-ல இத போடுங்க… கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

கழுத்து பராமரிப்பு

nathan