23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்

ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கும் மாஸ்க்குகள்

 

ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கும் மாஸ்க்குகள் குறிப்பாக தொடை, இடுப்பு, கணுக்கால் போன்ற இடங்களில் தான் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் பெரும்பாலும் ஏற்படும். பெண்களுக்கு பிரவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும். இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் சருமத்தின் அழகையே கெடுக்கும். ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க ஒருசில இயற்கை வழிகளைக் உள்ளது. அவற்றை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

• எலுமிச்சை சாறு பிழிந்து சாறு எடுத்து, அதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் பலமுறை செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக மறையும்.

• பிரசவத்திற்கு பின் சில மாதங்களுக்கு தாய்மார்களை தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு உடல் முழுவதும் மசாஜ் செய்து, சுடுநீரில் குளிக்க சொல்வார்கள். ஏனெனில் இந்த எண்ணெய்களுக்கு சருமத்தில் பிரசவத்தினால் ஏற்பட்ட ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யும் குணம் உள்ளது.

மேலும் இந்த எண்ணெய்கள் சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். ஆகவே தினமும் இரவில் ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உள்ள இடத்தை நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் குளிக்க வேண்டும்.

• கற்றாழை ஜெல் கூட சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யும். அதற்கு கற்றாழை ஜெல்லை அன்றாடம் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வர நல்ல பலனை விரைவில் காணலாம்.

Related posts

வெயில் காலத்தில் முகத்தில் வரும் கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

nathan

கண்ணனின் திருமணத்தினால் ஏற்பட்ட பிரிவு! விறுவிறுப்பான ப்ரொமோ

nathan

3000 ரூ வேலைக்கு சென்ற அமிதாப் பச்சனின் சொந்த மகள்.

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

வெள்ளை நிற உப்புக்கு பதிலாக இந்த உப்பை பயன் படுத்தினால் ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

கால் நாப்பது துண்டா வெடிச்சிருக்கா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

அடேங்கப்பா! பிக்பாஸ் அனிதா சம்பத்க்கு அடித்த அதிர்ஷ்டம்

nathan

முக பருவை போக்க..

nathan

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறை

nathan