32.6 C
Chennai
Friday, Jul 17, 2026

பதற வைக்கும் தகவல்! உடல் நலக்குறைவால் அவதிப்படும் அஜித் !

இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாட்டின் பிரதமர் ஜனாதிபதியைக் கூட பார்த்து விடலாம் போல் இருக்கிறது. ஆனால் நடிகர் அஜித் எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது மர்மமாக தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் எதையும் பயன்படுத்தும் பழக்கம் கிடையாது அஜித்திற்கு. சமூக வலைதளங்களில் தன்னைக் குறித்து வரும் பொய் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கவும் அறிக்கை வெளியிடவும் அவருடைய மக்கள் தொடர்பாளர் மூலமாக வரும் அறிக்கையை வைத்து தான் செய்திகளும் உறுதி செய்யப்படுகின்றன.

கரோனாவின் பாதிப்பு இந்தியாவிற்குள் நுழைந்த நாள் முதல் அஜித் தரப்பில் எந்த செய்திகளும் இல்லை. கடந்த மாதம் தொடக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அஜித். வலிமை படத்தின் படப்பிடிப்பு கரோனாவினால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் அவருடைய திருவான்மியூர் வீட்டிற்குள்தான் இருக்கிறார் அஜித்.

சினிமா துறையில் ஃபெப்சி அமைப்பினருக்கும் கரோனா நிவாரண நிதிக்கும் பல நடிகர்கள் நிதி அடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையிலும் அஜித் தரப்பில் இப்போது வரை எந்த பதிலும் இல்லாமல் மௌனமாக தான் இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் என்று சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆனால் இவை வலிமை படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தகவல் வந்திருக்கிறது.

அஜித் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது மக்கள் தொடர்பாளரிடம் கேட்டபோது அவருக்கு சிறியதாக உடல்நல பாதிப்பு இருக்கிறது என்ற தகவலை முன்வைத்திருக்கிறார். உடல் நிலை சீரானதும் ஃபெப்சி நிவாரண நிதி கரோனா நிவாரண நிதி தொடர்பான அறிவிப்பு அஜித் தரப்பில் இருந்து வெளிவர வாய்ப்பு இருக்கிறது.