30.5 C
Chennai
Friday, May 17, 2024
0901NigeriaPrinceCharles

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சையில் குணமடைந்தார்! அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்தார்!

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை மூலம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், அவர் குணமடைந்துவிட்டதாக சமீபத்தில் வீடியோ ஒன்றும் வெளியானது.

சார்லஸ் குணமடைந்தது குறித்து இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இளவரசர் சார்லஸ் ஆயுர் வேத சிகிச்சை மூலம் குணமடைந்தாக தகவல் வந்துள்ளது. பெங்களுரை சேர்ந்த ஆயுர்வேத ஐசக் மத்தாய் எனக்கு இந்த தகவலை தெரிவித்தார். இவர் பெங்களூரில் சவுக்கியா ஆயுர்வேத ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.

அவருடைய மருத்துவ முறைதான், சார்லஸை குணப்படுத்தியது என்று அவர் என்னிடம் தெரிவித்துள்ளார். ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி இரண்டும் சேர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் குணமடைந்தார் என்று மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

625.0.560.350.160.300.053.

மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்
இந்நிலையில், ஆயுர்வேத மருத்துவர் ஐசக் மத்தாய் இதுகுறித்து இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், பித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றம் இளவரசரின் மனைவி இருவரும் என்னுடைய வாடிக்கையான விசிட்டர்கள்தான். ஆனால், அவருக்கும் என்ன சிகிச்சை கொடுத்தேன் என்று என்னால் கூற முடியாது. மருத்துவமுறைகளின்படி என்னால் கூறமுடியாது.

அவர், என்னுடைய மருத்துவ ரிசார்ட்டில் சில மாதங்களுக்கு முன் தங்கியிருந்தார். கடந்த மாதம் நான் அவரை லண்டனில் சந்தித்தேன். ஆனால் அவருக்கு கொடுத்த மருந்து குறித்து என்னால் விளக்க முடியாது. நான் அதே மருந்தை ஃப்ளூ காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட பலருக்கு கொடுத்து இருக்கிறேன். ஆனால் கொரோனா பாதித்த நோயாளிகள் யாருக்கும் இந்த மருந்தை நான் கொடுத்தது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் லண்டனில் இருந்து இளவரசரின் அலுவலக அதிகாரிகள் இதை மறுத்து இருக்கிறார்கள். அதில் இந்த செய்தி பொய்யானது. லண்டனின் அதிகாரபூர்வ தேசிய சுகாதார சேவை எனப்படும் National Health Serviceதான் இளவரசருக்கு சிகிச்சை அளித்தது. வேறு சிகிச்சை எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை, என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சார்லஸ்க்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆதரவாளர்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளது.