1584983087 dr

தெரிந்துகொள்வோமா? கொரோனாவுக்காக கொடுக்கப்படும் இந்த மருந்தை யார் யார் உபயோகிக்கலாம்?..

கொரோனாவுக்கு உரிய மருந்தை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும் நோயாளிகளுடன் தொடர்பில் உள்ள, நோய் பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை மத்திய அரசு இப்போது பரிந்துரை செய்துள்ளது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு இந்த மருந்தைத் தர இயலாது. ஆனால் உடன் இருப்பவர்கள் வேண்டுமானால் முன்னெச்சரிக்கையாக தங்களைத் தாக்காமல் இருக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,15,317 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் இந்த நோயின் தாக்கத்தினால், 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனாவுக்கு உரிய மருந்தை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும் நோயாளிகளுடன் தொடர்பில் உள்ள, நோய் பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை மத்திய அரசு இப்போது பரிந்துரை செய்துள்ளது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு இந்த மருந்தைத் தர இயலாது. ஆனால் உடன் இருப்பவர்கள் வேண்டுமானால் முன்னெச்சரிக்கையாக தங்களைத் தாக்காமல் இருக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மருந்து ஏற்கெனவே மலேரியாவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், இதற்குமுன்பாக இம்மருந்தினை கொரோனா தடுப்புக்கான மருந்தாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஜோர்டான் நாடும் இதனைப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரை செய்திருந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த குழு, இதனைத் தேசிய அவசரக்கால மருந்தாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், குறிப்பிட்ட மருத்துவரின் அறிவுரையில்லாமல் இந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் கூறியபோது, “நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியருக்கு மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரைக்கப்படுகிறது.

இரண்டாவதாக, கொரோனா பாதித்த நோயாளியை ஒரு வீட்டில் தங்க வைத்துப் பராமரித்து வரும் நபர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த மருந்து நோய்த்தடுப்புக்கு மட்டுமே என்பதை விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தடுப்புக்கு மட்டுமே அவர்கள் அதை எடுக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.