எல்லோராலும் சுலபமாக வளர்க்கப்படும் மூலிகை செடி “கற்பூரவள்ளி”.
கற்பூரவள்ளியை குழந்தைகளுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் பெரியவர்களுக்கு கிடையாதுன்னு நினைத்து பல பேர் வீட்டில் குழந்தைகளுக்கு மட்டும்தான் கற்பூரவள்ளி கொடுப்பார்கள்.
- மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, காய்ச்சல் ஏற்பட்டால் கற்பூர வள்ளி இலையை கொடுக்கலாம். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை 5 எடுத்து நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும்.
- கற்பூரவள்ளி இலையை எடுத்து தண்ணீரில் கொதிக்கவிட்டு சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்தினால் தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி பிரச்சினைக்கு தீர்வு தரும்.
- நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நனவு கசக்கி தோலின் மேல் தேய்த்தால் படை, சொறி, அரிப்பு போன்றவை குணமாகும்.
- சில பூச்சிகள் கடிப்பதால் தோலில் இருக்கும் அப்பூச்சியின் நஞ்சையும், தோலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் கற்பூரவள்ளி குணப்படுத்தும்.
- கற்பூரவள்ளி ஒமேகா 6 என்கிற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. கற்பூர வள்ளி இலைகளை பறித்து சிறிதளவு தேய்காய் எண்ணெய்யோ அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து தீயில் கொஞ்சம் சூடாக்கி கை, கால், இடுப்பு பகுதிகளில் தேய்த்தால் எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோய் குணமாகும்.
- தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் பயம் மற்றும் கவலை கொள்வார்கள். இதனால் அவர்களின் மனதில் ஒரு அமைதியின்மையும், படபடப்பு ஏற்படும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு, அந்த இலைகளில் இருக்கும் ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், படபடப்பை குறைக்கும்.
- கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து கழிவுகளை வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது.
- நெஞ்சு,கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து வந்தால் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைசாற்றை பனங்கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.
- புகை பிடித்தல் ஒரு வகை போதை பழக்கம் ஆகும். புகைப்பிடிப்பவருக்கு நுரையீரலில் அதிகளவு நச்சுக்கள் சேரும். இதனால் சுவாசிக்கும் போது சிறிது சிரமத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு எதிர்காலத்தில் நுரையீரல் புற்று வருவதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கும் நச்சுகள், மாசுகள் எல்லாவற்றையும் நீக்கி, புற்று நோய் ஏற்படுவதையும் தடுக்கும்.
- நேரங்கடந்து சாப்பிடுபவருக்கு அஜீரண பிரச்சனை ஏற்படும். இந்த அஜீரணம் பிரச்சினை உள்ளவருக்கு சில வகை உணவுகளினால் அதிகளவிலும் நெஞ்செரிச்சல் ஏற்படும். இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலைகளின் சாற்றை எடுத்து சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கி, நெஞ்செரிச்சல் சரியாகும்.