24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
health
மருத்துவ குறிப்பு

காய்ச்சலால் அவதியா? இதோ எளிய நிவாரணம் பப்பாளி இலை சாறு போதுமே

நாம் எல்லோரும் பப்பாளி பழத்தைதான் சாப்பிடுவோம். பப்பாளி பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.

பப்பாளி மரத்தில் கிடைக்கும் காய், பழம் அனைத்தும் நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். அதிலும் பப்பாளி இலைக்குதான் விசேஷ மருத்துவக் குணம் நிறைந்துள்ளது.

பைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்கள் பப்பாளி இலையில்தான் நிறைந்து காணப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் எப்பேர் பட்ட காய்ச்சலை குணப்படுத்தும் சக்தி பப்பாளி இலைக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  • புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றி, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிக்கட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். இப்படி அருந்தி வந்தால் எந்த நோயாலும் நம்மலை ஒன்றும் செய்ய முடியாது.
  • பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டில் உள்ள அணுக்களை அதிகரிக்கச் செய்கின்றது. கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.
  • இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஈடிசு ஈஜிப்டை என்ற கொசு மனிதனை கடிப்பதால்தான் சிக்குன்குனியா என்ற நோய் பரவியது. ஈடிசு ஈஜிப்டை, ஈடிசு அல்போபிக்டசு என்ற இரு வகை கொசுக்கள் உள்ளன. பெரும்பாலும் இந்த வகை கொசுக்கள் பகல் நேரங்களிலும், அதிலும் காலை, மாலை என இரு நேரங்களில் அதிகமாக மனிதனை கடிக்கும். இப்படிப்பட்ட கொசுக்களால் ஏற்படும் சிக்கன் குனியாவை பப்பாளி இலைச்சாற்றை மனிதன் குடித்தால் நோய் குணமாகும்.health
  • வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனைகள், அலர்ஜி போன்ற சருமபிரச்சனைகளுக்கு இந்த பப்பாளி இலை அரைத்து குடித்து வந்தால் பிரச்சினைகள் தீரும்.
  • ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக பப்பாளி இலை உள்ளது.
  • பப்பாளி இலையை நன்கு சுத்தமான நீரில் அலசி, பின் அதனை கைகளால் கசக்கி, சாற்றை எடுத்தால், ஒரு டேபிள் ஸ்பூன் சாறு கிடைக்கும்.
  • காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் போது ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் சாப்பிட கொடுத்தால் பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
  • தினமும் நாம் பப்பாளி இலைச் சாற்றினை சிறிய அளவில் குடித்து வந்தால், அது நமது உடலில் ஏற்படும் உடல் சோர்வை சரி செய்து ஆரோக்கியத்தை கொடுக்கும்.
  • பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து தைலம் போல் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
  • பப்பாளி இலைச்சாற்றை கட்டி மேல் தடவி வந்தால் கட்டி சீக்கிரம் உடையும்.
  • உடலில் ஏற்படும் வீக்கங்கள் மீது பப்பாளி இலைச்சாறை பூசி வர வீக்கங்கள் குறையும்.
  • ஏதாவது உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் பப்பாளி இலை அரைத்து பூசினால் காயங்களுக்கு விரைவில் குணமடையும்.

Related posts

கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க

nathan

மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! கண்பார்வை குறைவதற்கான காரணங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் கர்ப்பிணிகளின் பழக்கங்கள்!!!

nathan

ஆஸ்துமா இருக்கா? சரியா மூச்சுவிட முடியலையா? அப்ப இத படிங்க!

nathan

கதாநாயகனை நினைத்துக்கொண்டு கணவரோடு வாழும் மாய வாழ்க்கை

nathan

தும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம்

nathan

தைராய்டு பிரச்சனை வராமல் இருக்கணுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வெட்டிவேரின் மகத்துவம்

nathan