மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
அதுவும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், இதுகுறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றால் நுரையீரலில் ஏற்படும் தொற்றே நிமோனியா ஆகும்.
அறிகுறிகள்
- இருமல்
- குளிர் காய்ச்சல், நடுக்கம்
- வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத் திணறல்
- வயிற்றுப்போக்கு
- உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல்
- நெஞ்சு வலி
- பசியின்மை, உடல் சோர்வு
- அதிகப்படியான இதய துடிப்பு
யாருக்கெல்லாம் வரலாம்?
நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளை எளிதில் தாக்குகிறது, இதுமட்டுமின்றி 65 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் ஏற்படலாம்.
சர்க்கரை நோய், புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா, உள்ளிட்ட நெஞ்சு சளி பிரச்சினை உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள்,
பக்கவாதத்தால் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோயிற்கு அளிக்கப்படும் சில மருந்துகள் போன்றவற்றின் காரணமாகவும் நிமோனியா தாக்குவதற்கு வாய்ப்புண்டு.
எப்படி தடுக்கலாம்?
- பிறந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக 6 மாத காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
- தடுப்பூசியை சரியான கால அளவில் குழந்தைகளுக்கு போட வேண்டும்.
- 50 வயதை கடந்தவர்களாக இருப்பின் ஒரு தடவையாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.
- நாம் வாழும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும், சளி, இருமல் இருந்தால் கைக்குட்டையை பயன்படுத்துவது அவசியம்.