24.4 C
Chennai
Tuesday, Dec 24, 2024
அழகு குறிப்புகள்

உங்களை அழகாக காட்ட எந்த மாதிரி உடைகளை அணியலாம்

 

உங்களை அழகாக காட்ட எந்த மாதிரி உடைகளை அணியலாம் அழகை மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது. தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் தேர்வு செய்ய கூடாது. முடியைக் கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய பார்டர் சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த சுடிதார் அணியவும் கூடாது.

கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். நீளமான, அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் எடுப்பாகத் தெரிவீர்கள்.

ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு செய்யக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள் மாறி, மாறி வருவது போல் ஆடையைத் தேர்வு செய்யலாம். இப்படி ஆடையைத் தேர்வு செய்யும் போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.

குட்டையாகவும், சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது. அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ் காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம். கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய பார்டருடனோ புடவை அணியலாம்.

முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை தவிர்ப்பது நல்லது. மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம் கொண்டவர்கள் அணியக் கூடாது. அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர் நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து அணியலாம். இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பது போன்ற புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.

குண்டாக இருப்பவர்கள், உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் மிகவும் குண்டாக தெரிவார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

ஒல்லியாக இருப்பவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து விட வேண்டும். பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.

Related posts

ரோசாசியா என்றால் என்ன?

sangika

முகத்திற்கான பயிற்சி

nathan

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

nathan

இந்த 5 ராசிக்காரங்க மாதிரி அன்பா இருக்க யாராலயும் முடியாதாம்…

nathan

சிறப்பான திருமண வாழ்க்கைக்கு சிறந்த டிப்ஸ்!….

sangika

இதோ ஈஸியான டிப்ஸ். முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென மாறவேண்டுமா?

nathan

இட்லி மாவில் சுவையான ஜிலேபி, பால் பணியாரம்!ருசித்து மகிழுங்கள்…..

nathan

திருமணமான இளம் பெண்ணை கதற கதற கற்பழித்த 60 வயது முதியவர்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி… எப்படி அப்ளை செய்ய வேண்டும்?

nathan