24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
pimple.1
முகப் பராமரிப்பு

இதோ எளிய நிவாரணம்! சீழ் நிறைந்த பருக்களா? இதனை எப்படி சரி செய்யலாம்?

பொதுவாக பருக்களில் சீழ் நிறைந்த பருக்கள் கடுமையான வலிமிக்கதாக இருக்கும்.

ஒருவருக்கு சீழ் நிறைந்த பருக்கள் முகத்தில் மட்டுமின்றி, கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதி போன்ற பகுதிகளிலும் வரும்.

சீழ் நிறைந்த பருக்கள் வந்துவிட்டால், சிலர் கைவிரலால் அதை தொட்டு பிய்த்து எறிந்துவிட கூடாது. இது பின்னடைவில் ஆறாத வடுவாக மாறிவிடும். இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது சிறந்தது.

அந்தவகையில் தற்போது இந்த சீழ் நிறைந்த பருக்களை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

  • 4 டீஸ்பூன் மஞ்சள் தூளை லேசாக வறுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி, நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி 4-5 மணிநேரத்திற்கு ஒருமுறை தடவி வந்தால், 3-4 நாட்களுக்குள் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும்.

  • 4 டீஸ்பூன் சீரகப் பொடியை லேசாக வறுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவுங்கள். இப்படி 4-5 மணிநேரத்திற்கு ஒருமுறை இந்த பேஸ்ட்டைத் தடவினால், பருக்களினுள் உள்ள சீழ் விரைவில் வெளியேறி, சீக்கிரம் சரியாகிவிடும்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பருக வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், சீழ் நிறைந்த பருக்கள் சீக்கிரம் குணமாவதோடு, இனிமேல் வராமலும் இருக்கும்.
  • 2 பல் பூண்டை பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், நீங்கள் நினைப்பதை விட மிகவும் வேகமாக பருக்கள் மறையும்.
  • வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவினால், பூண்டுகளைப் போன்றே வெங்காயமும் பருக்களை விரைவில் காணாமல் போகச் செய்யும்.
  • விளக்கெண்ணெயும் சீழ் நிறைந்த பருக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். 5-8 துளிகள் விளக்கெண்ணெயை காட்டன் உதவியுடன் பருக்களின் மீது வைத்து, பேண்டேஜ் கொண்டு அந்த பகுதியில் இறுக்கமாக ஒட்டி விட வேண்டும். இதனால் சீழ் நிறைந்த பருக்கள் பலவீனமாகி, சீழ் முழுமையாக வெளியே வந்துவிடும்.
  • தினமும் குளித்து முடித்த பின், 1-2 துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவ வேண்டும். இப்படி பருக்கள் முழுமையாக மறையும் வரை செய்யுங்கள்.
  • இரண்டு வெற்றிலையை சிறு துண்டுகளாக வெட்டி, 1/2 கப் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இப்படி 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின், அந்த இலையை அரைத்து பேஸ்ட் செய்து அதன் பின் அதை பருக்களின் மீது தடவி தடவி, துணி கொண்டு கட்டிவிடுங்கள். இப்படி வாரத்திற்கு குறைந்தது 2 முறை செய்யுங்கள்.
  • 20-25 வேப்பிலையை நீரில் போட்டு நீர் வற்றும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின், அதை அரைத்து பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவி, ஒரு துணியால் அவ்விடத்தைக் கட்டிவிடுங்கள். இப்படி தினமும் 2-3 முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.
  • பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை குடிக்கப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த சாற்றினை பருக்களின் மீது வைத்து வந்தால், பருக்கள் சீக்கிரம் குணமாகிவிடும். ஆனால் பாகற்காய் சாற்றினை சீழ் நிறைந்த பருக்கள் இருக்கும் போது 1/4 டம்ளர் குடித்து வந்தால், பருக்கள் சரியாவதோடு, இனிமேல் வராமலும் இருக்கும்.

Related posts

முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்…

sangika

சரும வறட்சிக்கு இயற்கையோடு கூடிய நிவாரணம் ……

sangika

இயற்கையான க்ளென்சர் கருப்பு திட்டுகள் மறைய

nathan

தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்

nathan

பெண்களே 30 வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்..

nathan

உங்க வறண்ட சருமத்தை பிரகாசமாக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan

பிளாக் ஹெட்களை போக்க உதவும் அசத்தலான டிப்ஸ்!!!

nathan

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க முகம் ஃபிரெஷ்ஷா, பளிச்சுன்னு இருக்க இந்த ஃபேஸ் ப்ளீச் பயன்படுத்துங்க!

nathan