தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைதான் இந்த வறட்டு இருமல்.
இந்த வறட்டு இருமல் வந்துவிட்டால் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும் தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும்.
இதனை சரி செய்ய சில ஆயுர்வேத முறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.
- ஒரு டீஸ்பூன் தேனில், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள சேர்த்து கலந்து சாப்பிட்டால், தொண்டைப்புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- பட்டை, இஞ்சி, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்தும் குடிக்கலாம். இது கடுமையான இருமல் மற்றும் சளியில் இருந்து விரைவில் விடுவிக்கும்.
- சுடுநீரில் தேன் கலந்து ஒரு நாளைக்கு பலமுறை குடித்து வந்தால், எரிச்சலூட்டும் இருமலில் இருந்து விடுபடலாம்.
- புதினாவை பல வழிகளில் உணவில் சேர்க்கலாம். அதில் இரவு உறங்குவதற்கு முதன் புதினா டீயை குடித்தால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் செய்யும் வறட்டு இருமல் தடுக்கப்படும்.
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால், வறட்டு இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். அதிலும் அத்துடன் சிறிது பூண்டு சேர்த்துக் கொண்டால், அது இன்னும் சிறப்பான பலனை விரைவில் தரும்.
- இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்லவோ அல்லது இஞ்சி டீயைத் தயாரித்துக் குடிக்கவோ செய்யலாம்.