26.4 C
Chennai
Sunday, Aug 17, 2025
1 1560770
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா யோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க? விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்….!

உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உலகம் முழுவதும் பல டயட்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதில் முக்கியமான ஒரு டயட் யோகர்ட் டயட் ஆகும். இந்த யோகர்ட் டயட் உங்களுடைய ஒட்டுமொத்த வயிற்றின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதுடன் உங்களுக்கு எடை குறைப்பிலும் உதவும்.

யோகர்ட் டயட்

நீங்கள் யோகர்ட் டயட்டை கடைபிடிக்க விரும்பினால் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது இது மற்ற டயட்டுகளை போல எளிதானதாக இருக்காது.

யோகர்ட் டயட் மிகவும் சிறிய அளவை கொண்டதாகும். இதில் அனைத்து நாட்களிலும் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு மாறாது. மிதமான அளவில் எடையை குறைக்க இந்த யோகர்ட் டயட் மிகவும் சரியான தேர்வாகும்.

யோகர்ட் டயட்டில் நீங்கள் முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது தினமும் 500 கிராம் யோகர்ட் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் வேறுசில ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக கிவி பழம், ஆப்பிள், பேரிக்காய், சுட்ட உருளைக்கிழங்கு, சிக்கன் மார்பு, தக்காளி, திராட்சை, கீரை, மாம்பழம் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முதல் நாள்

டயட்டின் முதல் நாள் 6 கப் யோகார்ட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் 4 ஸ்பூன் சிக்கனையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.1 1560770

இரண்டாம் நாள்

டயட்டின் இரண்டாவது நாள் 6 கப் யோகார்ட்டை எடுத்து கொள்ளுங்கள். மேலும் 4 சுட்ட உருளைக்கிழங்கையும் எடுத்து கொள்ள வேண்டும்.

மூன்றாம் நாள்

டயட்டின் மூன்றாவது நாள் 6 கப் யோகர்ட்டை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஆப்பிள், 1 கிவிப்பழம் மற்றும் 4 ஸ்பூன் சிக்கனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான்காம் நாள்

டயட்டின் நான்காவது நாள் 6 கப் யோகர்ட், 4 ஸ்பூன் சால்மன் மீன் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் 1 மாம்பழத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஐந்தாம் நாள்

டயட்டின் ஐந்தாவது நாளில் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்கள். குறிப்பாக வாழைப்பழத்தை இதில் சேர்த்துக்கொள்ள கூடாது. இதனுடன் 6 கப் யோகர்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆறாவது நாள்

ஆறாவது நாள் டயட்டில் வெறும் யோகார்ட்டை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே கப் யோகார்ட்டை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

ஏழாவது நாள்

டயட்டின் இறுதி நாளில் வெறும் யோகார்ட்டும், தண்ணீரும் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். 6 கப் யோகார்ட்டும், 8 முதல் 10 கப் தண்ணீரும் எடுத்து கொள்ளுங்கள். இந்த டயட் நீங்கள் எதிர்பார்க்கும் எடை இழப்பை உங்களுக்கு வழங்கும்.

Related posts

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

அலுவலகம் செல்வோர் எளிதில் உடல் எடைக் குறைப்பதற்கு உதவும் உணவுப் பழக்கவழக்கம்!!!

nathan

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பொருட்கள் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.. ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் பருமனால் மனக்கவலையா? இந்த சின்ன மாற்றத்தை செய்யுங்க போதும்…

nathan

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்

nathan

உடல் எடை குறைக்க விரும்புகிறீர்களா? காலையில் இதை மட்டும் குடிக்காதீங்க

nathan

தொப்பையை குறைக்கும் மந்திர சக்தி கொன்ட அன்னாசிப்பழம்!

nathan