கொரோனா வைரஸ் தாக்குதலானது கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவி விடுமோ என கர்ப்பிணி தாய்மார்கள் அச்சப்பட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கர்ப்ப காலத்தில் பிறக்காத குழந்தைக்கு தொற்று ஏற்படலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கொரோனா பாதிப்பிற்குள்ளான புதிய தாய்மார்கள் இன்னும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொடர்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை பிரித்தானியாவில் உள்ள ராயல் காலேஜ் ஆப் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர் மற்றும் பிறக்காத குழந்தைக்கு வைரஸ் அனுப்பப்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரு முன்னெச்சரிக்கை அணுகுமுறையாக, சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் கொண்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்குச் செல்லும்போது ஒரு மகப்பேறியல் பிரிவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் , லண்டன் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். உடனடியாக குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வந்த மத்தியில், ராயல் காலேஜ் ஆப் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் தலைவர் எட்வர்ட் மோரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆரோக்கியமான குழந்தைகளை பாதிக்கப்பட்ட தாய்மார்களிடமிருந்து பிரிக்கக்கூடாது என்றும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.