23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
மருத்துவ குறிப்பு

குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்

குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்
பெரும்பாலும் குண்டாக இருக்கும் போது கருத்தரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை அப்படி கருத்தரித்துவிட்டால், சிலருக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் மற்றும் பிறப்புக் குறைபாடு போன்றவை ஏற்படும்.ஆகவே தான் மருத்துவர்கள் கர்ப்பமாவதற்கு முன்பு எடை அதிகம் இருந்தால், முதலில் உடல் எடையை குறைத்துவிட்டு, பின் கருத்தரிக்க முயற்சிக்க சொல்கிறார்கள். குண்டாக இருக்கும் பெண்கள் ஒருசிலவற்றை பின்பற்றினால் தான், நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.குண்டாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உடல் எடை மேலும் அதிகரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு கலோரிகள் நிறைந்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். குண்டாக இருக்கும் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்புடன் இருப்பதன் மூலம் ஆரோக்கியமான பிரசவத்தைக் காணலாம். அதற்கு ஒருசில செயல்கள் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்ற வேண்டும்.கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக கால்சியம், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்களை தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும். குண்டாக இருக்கும் கர்ப்பிணிகள் புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் எனர்ஜியானது அதிகரித்து, நல்ல மனநிலையைக் கொடுக்கும்.

முக்கியமாக கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை மறந்துவிட வேண்டும். இதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் குண்டாக இருக்கும் பெண்கள் எடை அதிகரிக்கக் கூடாது என்று நினைத்தால், ஒரு பௌல் ஸ்நாக்ஸ் உடன் தண்ணீரை அதிகம் குடிப்பதன் மூலம் தடுக்கலாம்.

பசியை கட்டுப்படுத்த தண்ணீர் மிகவும் சிறந்தது. கர்ப்ப காலத்தில் நிறைய உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். மேலும் அவை அனைத்தையும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இருப்பினும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், மனதில் அத்தகைய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துக் கொள்ளுங்கள்.

குண்டான கர்ப்பிணிகள் தங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க, தினமும் உடற்பயிற்சி, யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். முக்கியமாக யோகாவை கர்ப்பிணிகள் மேற்கொள்வது நல்லது. குண்டாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க டயட்டை மேற்கொள்ளக் கூடாது. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

Related posts

உடம்பு எடையை நீங்க குறைக்கணுமா? இந்தத் தவறுகளை செய்யாதீங்க!!

nathan

தைராய்டு பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்!!

nathan

சர்க்கரையை நோயை குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்

nathan

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேனீர்

nathan

பார்வைத் திறனை பாதுகாக்க வழிகள்…!

nathan

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுகமான பிரசவம் அமைய ஆயுர்வேத நூல்கள் கூறும் டிப்ஸ்கள்!

nathan

குழந்தைகளைத் தாக்கும் முக்கியமான புற்றுநோய்கள்… மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள் – ‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan