ஜிம் பால் ட்ரையர் எக்ஸ்டென்ஷன் (Gym ball trier extension):
ஜிம் பாலின் மேல் நிமிர்ந்து உட்காரவும். கால்களை சற்றே அகட்டி வைத்துக்கொள்ளவும். வலது கையில் டம்பிள்ஸை எடுத்து, தோள்பட்டை அருகில் வைக்கவும். மற்றொரு கையால் வலது கையின் புஜத்தை ஆதரவாகப் பிடித்துக்கொள்ளவும். இப்போது, வலது கையை தலைக்கு மேல் உயர்த்தி இறக்கவும். இப்படி, இரு கைகளுக்கும் ஆரம்பத்தில் தலா 20 முறையும் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம்.
பலன்கள்: தோள்பட்டை மற்றும் கையில் உள்ள தேவையற்ற சதை குறையும்.
ஹேண்ட்ஸ் டூ டோ டச் (Hands to toe touch):
விரிப்பில் கால்களை அகட்டி, வலது கையை முன்புறம் நன்கு நீட்டவும், இப்போது இடது காலை முடிந்தவரை மேலே உயர்த்த வேண்டும். வலது கையால் இடது கால் பெருவிரலைத் தொட வேண்டும். கை,கால்களை மாற்றிய நிலையில், இவ்வாறு, ஒவ்வொரு பக்கமும் 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மெதுவாகவும், பின்னர் படிப்படியாக வேகமாகவும் செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிறு, தோள்பட்டையில் உள்ள கொழுப்பு குறையும்.