menstruation
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை மட்டும் சப்பிட்டு விடாதீர்கள்! ஏன் தெரியுமா?

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காலத்தில் கருப்பையின் உள் மடிப்புகளிலிருந்து இரத்த போக்கு என்பது மாதந்தேறும் ஒரு சுழற்சி முறையில் ஏற்படுகிறது.

ஒரு பெண் கருத்தரிக்காத நேரங்களில் கருப்பையின் உள் மடிப்புகளில் உள்ள இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தமானது கழிவாக வெளியேற்றப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களாக இருக்கும்.

இன்னும் சில பெண்களுக்கு 21 நாட்களாகவும், வேறு சில பெண்களுக்கு 35 நாட்களாகவும் இருக்கும். சாதாரணமாக மாதவிடாய் காலமானது 2-7 நாட்கள் வரை இருக்கும். சராசரியாக 5 நாட்கள் வரை இருக்கும்.

இந்த காலப்பகுதிகளில் பெண்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். சில வகையான உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.

அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.201802101109174354 push off menstruation in a natural way SECVPF.gif

தவிர்க்க வேண்டிய உணவுகள்
  • வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை, கேக்.
  • கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகள்.
  • நன்றாக பொரிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், டோ நட்ஸ், பேக் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள்.
  • கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள்.
  • உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
  • உப்பு சேர்த்து செய்யப்பட்ட நட்ஸ், ஸ்நேக்ஸ், ஊறுகாய், புகையால் சமைக்கப்பட்ட உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகள், சீஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவை உண்டாகும். இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது மாதவிடாய் காலத்தில் இது போன்ற உணர்ச்சிகளை அதிகரிக்கும். எனவே இது போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
  • மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள், ஸ்வீட்ஸ், கேட், குக்கீஸ் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும்.
  • ஆல்கஹால் பருகுவது என்பது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். ஆல்கஹால் பருகுவதால் மாதவிடாய் காலத்தில் ஓய்வு எடுக்க முடியாமல் போகும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.
  • கொழுப்பு நிறைந்த ரெட் மீட் ஆனது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியதாகும். இதனை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதால் உடல் வலி உண்டாகும்.
  • காபி, டீ, காஃபின் உள்ள உணவுகள், எனர்ஜியை கொடுக்கும் பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபின் நிறைந்திருப்பதால், இதனை மாதவிடாய் காலத்தில் தவிரக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு மன அழுத்தம் உண்டாகும்.

Related posts

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது? தெரிந்துகொள்வோமா?

nathan

சுண்டை…சின்னகாய்…பெரிய பலன்…!

nathan

எக்காரணம் கொண்டும் மருத்துவரை பார்க்கமாட்டேன் என்பதற்கு மக்கள் வைத்திருக்கும் மடத்தனமான காரணங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மருத்துவர்கள் எப்போது சிசேரியன் செய்ய வேண்டுமென கூறுவார்கள் தெரியுமா?

nathan

திருநங்கைகளால் கருத்தரிக்க முடியுமா? உண்மை என்ன ?

nathan

கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்தக் குழாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் அற்புத நாட்டு மருந்து!சூப்பர் டிப்ஸ்….

nathan

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா… இதப் படிங்க முதல்ல!

nathan

கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா?

nathan

புரோஸ்திரேட் வீக்கம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்

nathan