கல்லூரி, பள்ளிகளில் பயிலும் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது உடல் முழுவதும் முடிமறைக்ககூடிய ஆடைகளை அணியுங்கள்.
* காதல் என்னும் மாயபோர்வையில் சிக்கிய இளைஞர்களிடமோ அல்லது ஆண்களிடமோ நாம் தனி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் கட்டுபாட்டுடன் இருப்பதற்கான மனதினை வளர்த்து கொள்ள வேண்டும்.
* இணையதளங்களில் நமக்கு தெரிந்தவர்களின் ஆபாசகாட்சிகள் இருப்பதை அறிந்தால் அது தொடர்பாக காவல் நிலையங்களில் தெரியபடுத்தி அக்காட்சிகளை படங்களை நீக்க முயற்சியுங்கள்.
* பெண்கள் படிக்ககூடிய பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பிரச்சனைகளில் தாற்காத்து கொள்ளகூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தலாம்.
* பொது இடங்கள், பொது கழிப்பிடங்கள், உடை மாற்றும் அறைகளில் மற்றும் அதிகம் பழக்கமற்ற நண்பர்களுடன் தங்கும் பொழுது சுற்றும் முற்றும் கவனிக்க வேண்டும்.
* பொது இடங்கள்,பூங்கா, கடற்கரை மற்றும் சில இடங்களில் தோழிகள் தங்கள் நண்பர்களுடன் இருக்கும் பொழுது உங்களை சுற்றி சந்தேகபடக்கூடிய நபர்கள் இருக்கிறர்களா எனவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
* விழா காலங்களில் மற்றும் இரவு பயணங்களின் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும். இரவு நேர விடுதிகளில் தங்குவதை
* குழந்தைகள் பயன்பாட்டில் உள்ள இணையதள பயன்பாட்டு பொருள்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கவும்.
* பெண்கள் முடிந்த வரையிலும் தங்களின் புகைப்படங்களை இணையதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள்.
* இணையதளங்களில் ஆபாச காட்சி படங்கள் தங்களை பற்றி இருந்தால் அவற்றை நீக்க முயற்சியுங்கள். விபரீத முடிவுகளை மேற்கொள்வதை தவிர்க்கபாருங்கள். பெற்றோரிடம் மறைமுகமாக தெரியபடுத்துங்கள்.
* சந்தேகத்திற்குரிய நபர் இது தொடர்பான படங்களை இணையதளங்களில் பரப்புகிறார் என்றால் பெண்கள் உடனடியாக அவர்களை புகார் செய்யுங்கள்.
* இது தொடர்பான பிரச்சனைகளில் சிக்கிய பெண்களை வெறுக்காதீர்கள். அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அரவணைப்புடன் இருக்க முயற்சியுங்கள். நடந்த உண்மைகளை பற்றி புரிந்து கொள்ளுங்கள்.
* பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை பற்றி தனி கவனம் செலுத்தி கவனித்து வர வேண்டும்.