29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

பொதுவாக சிலக்கு வேலைப்பளு காரணமாக அடிக்கடி கடுமையான தலைவலி வருவதுண்டு.

தலைவலி ஒரு கூர்மையான வலி, துடிக்கும் உணர்வு அல்லது ஒரு மந்தமான வலி போல உணரச் செய்யும். வலி, தலையின் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்களிலும் ஏற்படலாம்.

தலைவலிக்கு காய்ச்சல், சளித்தேக்கம் குமட்டல் அல்லது வாந்தி, மருந்துகள், மன உளைச்சல், அல்லது கவலை, ஒவ்வாமைகள் போன்ற ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றது.

இது நம்மை எந்த வேலையையும் செய்யவிடமால் முடக்கிவிடுகின்றது.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபட சில குறிப்புகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அதனை பார்ப்போம்.

  • வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பயன்படுத்தி கிராம்பை பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்.
  • சாமந்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தலை வலிக்கும் போது நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.
  • தலைவலி இருக்கும் போது, ஆப்பிளை உப்பு தொட்டு சாப்பிட, தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • உருளைக் கிழங்கை துண்டாக்கி, நெற்றியில் தேய்க்கவும் அல்லது அதனை அரைத்து தலையில் பற்று போல் இடுங்கள். சில நிமிடங்களில் தலை வலி மறைந்து போகும்.
  • ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து இஞ்சியை நசுக்கி அதில் போடுங்கள். 10 நிமிடம் நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அதனை இறக்கி எலுமிச்சை சாறு சில துளிகள் பிழிந்து, அதனை வெதுவெதுப்பாக பருகவும். வலி சட்டென விட்டுவிடும்.
  • சுக்கு ஒரு துண்டு எடுத்து நீர் விட்டு அரைத்து தலையில் பற்று இடுங்கள். தலைவலி குணமாகிவிடும்.
  • உங்கள் உடலில் தேவையான அளவு நீரில்லாதபோது சூடேறி தலைவலி உண்டாகும். உடனே சில டம்ளர் நீர் குடித்து பாருங்கள்.
  • முட்டைக் கோஸ் இலையை நீர் விடாமல் அரைத்து அதனை தலையில் பற்று இடவும். அதன் சற்றினை நெற்றியில் தடவவும்.
  • பால் கலக்காத வரகாபியில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

nathan

விலங்கொன்றினால் கடியுண்டால் செய்யவேண்டிய முதலுதவி. விலங்கு விசர் நோயும் அதன் கட்டுப்பாடும்

nathan

கண்புரை என்றால் என்ன?

sangika

தொடை முதல் பாதம் வரை உறுதியாக்க எழுந்ததும் இதை செய்யுங்க

nathan

மனித உடலில் தேவையின்றி இருக்கும் பயனற்ற உடல் பாகங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

nathan

பெண்களின் சிறுநீர்க்கசிவுக்கு மருத்துவம்

nathan

உங்களுக்கு தெரியுமா மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி….!

nathan

எச்சரிக்கை முக்கியம்!!செல்ல பிராணிகளிடம் இருந்து இந்த வியாதிகள் எல்லாம் பரவுகிறதா,

nathan